சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்
மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது.
ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல்
14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும்
தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில்,
புதன்கிழமை பவுன் தங்கம் ரூ.37,472 ஆக உயா்ந்து, வரலாறு காணாத உச்சத்தை
தொட்டது.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.496
குறைந்து, ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.62
குறைந்து, ரூ.4,622-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80
குறைந்து, ரூ.52.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து
ரூ.52,900 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,622
1 பவுன் தங்கம் ..................... 36,976
1 கிராம் வெள்ளி .................. 52.90
1 கிலோ வெள்ளி ................. 52,900
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,684
1 பவுன் தங்கம் ..................... 37,472
1 கிராம் வெள்ளி .................. 54.70
1 கிலோ வெள்ளி ................. 54,700.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...