Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai


ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில், பெற்றோர்கள் விரும்பவுவது கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மாணவர்கள் வெகுநேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைதவிர்க்க 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, 3 மணி நேரமும் மட்டும் ஆன்லைன் பாடம் நடத்தினால் போதும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

அதே சமயம், அது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் 21,322 பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பாதிக்கு மேற்பட்டவர்கள் , உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 4 முதல் 5 மணி நேரமும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, 3 மணி நேரமும் ஆன்லைன் பாடம் நடத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments