கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முடல் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது
குறித்து மாநிலங்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் மத்திய பள்ளிக்கல்விச்
செயலாளர் அனிதா கார்வால் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் மாணவர்களின்
உடல்நலம் மற்றும் மருத்துவக் காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போதுதான், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த, கொரோனா காலத்தில்
பள்ளிகளை மீண்டும் திறக்க பெற்றோர்கள் விரும்பவில்லை என்றும் கொரோனா
தடுப்பூசி உருவான பின்னரே பள்ளிகள் திறக்கவேண்டும் என்று பல பெற்றோர்கள்
கோரிக்கை வைத்ததாக அதிகாரிகள் கூயிருக்கிறார்கள்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர்
இன்ஸ்ட்டிடியூட் மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவுடன் இணைந்து தயாரித்த
தடுப்பூசியை அடுத்தமாதம் பரிசோதனை செய்ய இருக்கிறது. இந்த தடுப்பூசியை
இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்ட்டிடியூட் என்ற மருந்து நிறுவனம் தயாரிக்க
ஒப்பந்தம் போட்டுள்ளது. சோதனை வெற்றிபெற்றால் டிசம்பர் மாதத்தில்
தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுவிடலாம்.
மேலும், அவர்கள் 'பள்ளிக்குழந்தைகளின் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக
இருக்கிறோம். குழந்தைகளின் ஆரோக்கியம் மிக முக்கியம்' என்று மனித வள
மேம்பாட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள். அதேபோல், மெட்ரோ சேவையின்
நிறுத்தமும் தொடரும். ஆனாலும் கடந்த ஜூன் மாதம் டெல்லி, கொல்கத்தா மற்றும்
பெங்களூரில் மெட்ரோ சேவை இயக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் அவை
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் தொழிலாளர்களுக்கு மட்டும்தான்.
பொதுமக்களுக்கு கிடையாது. மற்ற மாநிலங்களில் மேட்ரோ சேவைகள்
நிறுத்தப்பட்டுள்ளது தொடரும்' என்றார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...