ஆடத் தெரியாதவனுக்கு (முற்றம்) முற்றும் கோணல் - பழமொழிக்கட்டுரை
முன்னுரை
உலகில் தோன்றிய மனிதன் மொழி யால் பேசும் வகையறியாத காலத்தில் உடல் அசைவுகளால், செய்கைகளால் தன் உணர்ச்சி யைக், கருத்தைப் பிறருக்குப் புரிய வைத்தான்
அதுவே பிறகு நாட்டியம் எனும் நடனம் ஆனது. அவன் ஆடும் ஆட்டத்திற்கேற்ப எழும் ஒலியில் லயம் காண இசையும், இசைக்கு ஏற்ப கைகள் போட்டு, தாளமும் உண்டாயின
பிறகு நாட்டிய வகைகள் பலவகையாகப் பிறந்து வளர்ந்து வந்துள்ளதை வரலாறு களாகக் காண்போம்; ஆயினும் நாட்டியம் ஆடுபவனுக்கு ஏற்ற இடம் பற்றியும், ஆடுப வனின் தோற்றங்களுக்கு என சாமுத்ரிகா லட்சணமும் கூறப்பட்டன. மக்களின் பல் வகைப் பழக்க வழக்கங்களுக்கும் அனுபவத் தால் ஆன்றோர் உரைத்த மொழியாம் பழ மொழி இங்கே ஆடுபவனுக்காக வருகின்ற தொடரைப் பாருங்கள். 'ஆடத் தெரியாத வனுக்கு (முற்றம்) முற்றும் கோணல் என்பதிலேயே நமக்குப் பல ஐயங்கள்! இம்மொழி உணர்த்தும் சீரிய பொருள் என்ன
பொருளுரை சாதாரணமாக நாட்டியம் ஆடுபவனுக்கு, தனி யாகவோ, குழுவாகவோ ஆடும் நபர்களின் எண்ணிக் கைக்குத் தகுந்த விசாலமான இடம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஆட்டக்கலையில் நன்கு கை தேர்ந்தவர்கள் இடத்தைப் பார்க்காமல் எவ்வாறாயினும் தமது திறமையை வெளிப்படுத்துவர். அத்தகையவர் களுக்கு முடியாதது என்பது ஒன்றும் இல்லை. கோணல் என்பதே கிடையாது. இடம் ஒரு பொருட்டல்ல... நல்ல திறமைசாலிகளுக்கு செய்யும் செயலில் உறுதியாக யிருக்கும் ஆற்றல் உண்டு. 'கருமமே கண்ணாயினார் என்பதற்குச் சான்றாக விளங்கும் எனில் இப்பழ மொழி இவர்கட்குப் பொருந்தாது. ஏனெனில் ஆடத் தெரியாதவர்களுக்குத் தான் 'முற்றம் கோணல் என்னும் சாக்கு! இது மேலோட்டமான கருத்து. புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவுடையோரின் நினைவின் வர்மம்
முதலில் இப்பழமொழி உச்சரிப்பிலேயே இக் காலத்தின் கோலமாகப் பிழையாகப் போனது. ஆடத் தெரியாதவனுக்கு முற்றும் கோணல் என்பது 'முற்றம் கோணல்' என மருவி விட்டது இவ்வாறே இன்று பெரும்பாலோரால் எடுத்தாளப்படுகிறது. அதுவும் ஏதோ நாட்டியம் ஆடுகின்ற ஆட்டக்காரர்களுக்கு ட்டும் உரி தான மொழியாக, எச்செயலும் சரியாக செய்யத் முடி யாத சோம்பல் மனிதர்களுக்காக உரைக்கப்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் வல்ல நம் முன் னோர்களின் சீரிய நோக்கு சமுதாயத்தின் நல் வழிப்போக்கிற்காகத்தான் எச்செயலும், எம்மொழியும் என்பது நாமறிந்த ஒன்றே
எனவே மேற் கூறிய பழமொழியின் உட்கருத்தை ஆராய்ந்து தெளிவு பெறுவது நம் கடமை அன்றோ
நாம் மானிடராக இம்மண்ணில் பிறக்கும் போது அவரவர் வினைப்பயனின் விளைவாக பரமன் எழுதிய எழுத்தாக நமக்கு இப்பிறவியின் செயல் திட்டம் விதைக்கப்பட்டுத்தான் பிறக்கிறோம்.
அதைத்தான் நாம் விதி எழுதிய எழுத்து தலை எழுத்து என்கிறோம்... நம் வாழ்நாளின் இன்ப துன்பங் களை அனுபவிக்கக் காரணமான முற்பிறவியின் நல் வினை, தீவினைகளின் பயன், வங்கிக் கணக்கு போல் நமது சேமிப்பிலிருந்து போட்டு அனுப்பப்பட்டதாகவும்!
அதனால் நாம் இறையருள் கொண்டு எச்செயலையும் செய்யுமுன் சிந்தித்து இயற்கையோடு, இயல்போடு அமைந்த வாழ்க்கையை வாழப் பழக வேண்டும்.
அதற்கு நமக்குத் தெளிந்த அறிவு வேண்டும். அந்த அறிவு பெற இறையருள் வேண்டும். நம்மை ஆட்டு வித்துத் தான் ஆடாமல் இருக்கின்ற அப்பரம்பொருள் கையில் உள்ள காலச் சக்கரம் என்னும் சாட்டையில் சுற்றப்பட்ட நூல்தான் மெல்லிய இழைகள் நம் மேல் படர்ந்து நம்மை ஆட்ட, அதன் சுழற்சிக்கு ஏற்ப நாம் ஆடு கிறோம். அவனுடைய தாளகதி, புரியாமல், நம் விதியை அவன் துணையில் அவன் தரும் மதியால் வெல்ல முடி யாதவன் 'ஆடத் தெரியாதவன்' வாழ்க்கையின் போக்கில் எதிர்நீச்சல் போட்டுக் கரை சேரத் தெரியாதவன். இவ னுக்கு முதலே கோணல் என்றால் முடிவில் அவன் வாழ் வில் இறுதியில் மீண்டும் பிறப்பு, இறப்பு என்னும் சூழல் அமைந்து கோணலாகிவிடும். வினை அறுக்க விதிமாற நமக்கு ஆட்டத்தின் போக்கு புரிந்து, கிடைத்த இடம்... அந்த வழியில், எந்த உருவில் இறையருள் நம்மைச் சேருகிறதோ அதை, அவனைச் சிக்கெனப் படுத்த வேண்டுதல் வேண்டாமை விட்டு வாழும் வாழ்க் கையைப் பற்றிக் கொள்ள வேண்டும்..... இப்போது இவ் வுலக மாயைகளின் ஆட்டம் புரிந்து உண்மையின் பேரொளி ிட்டும்... இல்லையெனில் முதலும் கோணல், முற்றும் கோணல் என்பது. ஆடத் தெரியாதவனுக்கு முற்றும் (எல்லாம்) கோணல் தலைகீழ் என ஆகிவிடும் என்பதே மெய்ப் பொருள் ஆகும்.
முடிவுரை
ஆடத் தெரியாதவனுக்கு முற்றும் கோணல் என்றால் - இடம் சரியில்லை , அதனால் ஆட்டமும் சரி யில்லை என்றாலும் யதார்த்த வாழ்வின் போக்கிற்குச் சரியாக உள்ளது ஆயினும், ஆன்றோர் வழி நின்றால் அஃது உயரிய படைப்புக் கடவுளின் நிகரற்ற தத்துவத் தின் காரணமாக உலகியல் மாற்றமும், ஏற்றமும் கருதி உரைத்த ஒரு ஒப்பற்ற மொழி என்பது புலனாகின்றது அல்லவா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...