மாயமான சுகாதார ஆய்வாளர் இறந்து விட்டதாக யூகித்து,
அவரது மனைவிக்கு, சட்டப்பூர்வ பணப் பலன்கள் வழங்க, உயர் நீதிமன்ற மதுரைக்
கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், டி.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தவர் நடராஜன்.
இவர், 2003 மே 2ல் மாயமானார்.
10 ஆண்டுகளாகியும், அவரை பற்றி தகவல் இல்லாததால், 2013ல், அவரை பணி நீக்கம் செய்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
அவரது மனைவி பொன்னி, 'என் கணவர் மாயமாகி விட்டதால், சட்டப்பூர்வ பணப் பலன்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றக் கிளையில், மனு தாக்கல் செய்தார்.
தனி நீதிபதி, 'மனுதாரரின் கணவர், 1982 முதல் 2003 வரை பணிபுரிந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக யூகித்து, அவருக்குரிய சட்டப்பூர்வ பணப் பலன்களை, மனைவிக்கு வழங்க வேண்டும்' என, 2018ல் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பொது சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மேல்முறையீடு செய்தனர்.
இதை விசாரித்த, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:
நடராஜனை பணி நீக்கம் செய்து, 'எக்ஸ் பார்ட்டி'யாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக, 2020 மார்ச் 13ல், பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், பொன்னி பணப்பலன்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தடை விலகியுள்ளது.
நடராஜனை இறந்தவராக கருத முடியாது.
ஆனால், இந்திய சாட்சியச் சட்டப் பிரிவின்படி, ஏழு ஆண்டுகளுக்கு மேல் மாயமான ஒருவரை, யூகத்தின் அடிப்படையில், இறந்தவராக கருதலாம்.
இவ்வழக்கில், நடராஜன், 2003ல் மாயமாகி விட்டார்.
அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற போலீசாரின் சான்று பெற்று, பொது சுகாதார இயக்குனரிடம், உத்தரவாத பத்திரத்தை, பொன்னி தாக்கல் செய்ய வேண்டும்.
அதனடிப்படையில், அவருக்கு சட்டப்பூர்வ பலன்களை வழங்க வேண்டும்.
ஒருவேளை, நடராஜன் உயிருடன் வரும் பட்சத்தில், பொன்னியிடம் உள்ள சொத்துகளை மீட்க, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம்.
அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...