ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் உதவிகளை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் வசதி இல்லாததால் தற்காலிகமாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த வங்கிகளில் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து கடன் வழங்கப்படும் என்றார்.
அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், மாநிலத்தின் சூழ்நிலை கருதி கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்களின் கருத்து கேட்டு, கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...