புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளை நீக்கக் கூடாது புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான வழிகாட்டு
நெறிமுறைகளையும் மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், ‘புலம்பெயர்ந்த
தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த புள்ளி விவரங்களை அனைத்து மாநில,
யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் திரட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும்
அக்குழந்தைகளை பதிவேட்டில் இருந்து நீக்கக் கூடாது. எந்த நேரத்திலும்
அவர்கள் மீண்டும் திரும்பி வர வாய்ப்புள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே
போல கிராமப்புறங்களில் புலம்பெயர்ந்து வந்த குழந்தைகளிடம் அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகள் அதிக அடையாள ஆவணங்களை கேட்க கூடாது. சில ஆவணங்களுடன்
குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். டிசி, முன்பு படித்த
வகுப்பு சான்றிதழ் போன்றவை கேட்டு நெருக்கடி தர கூடாது,’’ எனவும்
கூறப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளை நீக்கக் கூடாது - மத்திய அரசு அறிவிப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...