Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

உயிர்ச் சத்துக்கள் போலத் தாது உப்புக்களும் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது

தாது உப்புக்களின்றி உடலுக்குள் நடைபெறும் பல உயிரியல் வேதியியல் வினைகள் மற்றும் பரிமாற்றங்கள் நிகழா. பல தாது உப்புக்கள் நமக்கு சிறிய அளவில் அன்றாடம் தேவைப் படுகின்றன

இவற்றுள் ஒரு சில மிகவும் முக்கியமானவைகளாக விளங்குகின்றன. இவற்றின் குறைபாட்டினால் உடல் நலக்கேடுகள் கூட விளையலாம். இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகையும் (anaemia) கால்சியம் சத்துக் குறைவினால் எலும்புகள் வலுவிழந்து எளிதாக முறிந்து போவதும், பற்கள் மற்றும் நகங்கள் போன்றவைகள் உதிர்ந்து விழுவதும் சில எடுத்துக்காட்டுகளாகும்

உணவுப் பொருட்களை அதிகமாகச் சமைத்து விடுவதினால், நம் உடலின் பொலிவிற்கு மிகவும் அவசியமான பல தாது உப்புக்களைப் பொதுவாக நாம் இழந்து விடுகிறோம், அல்லது மிகவும் சொற்ப அளவிலேயே பெற்று வருகிறோம். பழங்களையும் பச்சைக் காய்கறிகளையும் நம்முடைய உணவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுவதினால் இந்த இடைநிலை இழப்பைப் பெருமளவு தவிர்த்துக் கொள்ளலாம்.

சுறுசுறுப்பான இயக்கம், கடுமையான உழைப்பு உடலுக்குத் தேவைப்படும் தாது உப்புகளின் அளவு குறிப்பாக இரும்பு, மக்னீசியத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இக்குறிப்பிட்ட தாது உப்புக்கள் குறைவாகவே கிடைக்கும் நிலையில் தசை நாண்கள் செயல் திறன் அற்றுப் போகின்றன. தவிரவும் இதயத்தின் இயக்கங்கள் மந்தப்படுவதும் உண்டு

தோல், தசை, இரத்தம், நரம்புகளின் செல்கள் போன்றவைகளைத் தோற்றுவிப்பதிலும் அவற்றின் வளர்சிதை மாற்றங்களிலும் தாது உப்புக்கள் முக்கியப் பங்கேற்றுள்ளன, சிதைவுற்ற தோல் பகுதிகள் அப்போதைக்கப் போது சீர் செய்யப் படுவதற்கும் தோல் சுருக்கமடைந்து பொலிவற்றுப் போய்விடாமல் இருப்பதற்கும் இந்தத் தாது உப்புக்களே காரணம்

உடலின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் உயிர் வேதியியல் வினைகள் நிகழ உயிர் சத்துக்கள் போல தாது உப்புகளும் துணை செய்கின்றன

தலையில் பொடுகு ஏற்படுவதற்கு தாது உப்புக்களின் குறைபாடே காரணம் என்று சொல்கிறார்கள்

மனநிலைகூட தாது உப்புக்களின் குறைவினால் பாதிக்கப்படலாம் பிடித்திருக்கிறார்கள் கண்டு என்றும்

நமக்குத் தேவைப்படும் தாது உப்புக்களை பொதுவாக இரு பெரும் பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம். அவற்றைப் பேரியல் தாது உப்புக்கள் (Macro minerals) மற்றும் நுண்ணிய தாது உப்புக்கள் (Micro nutrients) என்று குறிப்பிடுகின்றார்கள். பேரியல் தாது உப்புக்கள் உடலில் மிகமிகச் சொற்ப அளவிலேயே காணப்படுகின்றன. பேரியல் தாது உப்புகளுக்குள் கால்சியம், மக்னீசியம் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவை அடங்கும். நுண்ணியல் தாது உப்புக்களுள் இரும்பு செலினியம், அயோடின், கந்தகம் மற்றும் துத்தநாகம் போன்றவைகள் முக்கியமானவைகளாகும்

உடலின் இயல்பான இயக்கங்களுக்கு, கால்சியம் மிகவும் அவசியம். உடலில் உள்ள செல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும், பழுதுற்ற தோல் பகுதி சீரடைவதற்கும் எலும்பு, பற்கள், நகம் போன்ற உறுப்புகள் வலுவாகப் பொலிவுற்றுத் திகழ்வதற்கும் இந்த கால்சியம் காரணமாகிறது. சாப்பிடப்படும் உணவுப் பொருட் களிலிருந்து சத்துப் பொருட்களை உட்கிரகித்துக் கொள்வதற்கும், சுற்றுப்புறச் சூழல் பல்வேறு மாசுகளினால் அதிகமாகச் சீர்கெட்டு வரும் இந்நாளில் அதன் பாதிப்புகளைத் தாங்க உடலுக்குள் (ஓர்) எதிர்ப்பு சக்தியைத் தூண்டவும், இ கால்சியம் துணை செய்கின்றது. பால் மற்றும் அதன் விலை பொருட்கள் தானியங்கள், விதை உணவுகள், பருப்புகள் போன்றவற்றில் கால்சியம் அதிகம்

மக்னீசியம் உணவுப் பொருட்கள் சீரணமடைய பெரிதும் துணை செய்கின்றது. தோல் எலும்புகளின் செழுமைக்கு மக்னீசியம் அவசியம் தேவை. ஆப்பிள், எலுமிச்சை, திராட்சைப் பழங்களில் இது அதிகம் காணப்படுகின்றது

கால்சியம் போல பாஸ்பரசு, எலும்பு, பற்கள், நகம் மற்றும் முடி போன்றவற்றை வலிவாகவும், பொலி வாகவும் வைத்திருக்க உதவுகின்றது. உணர்வுகள் எச்சரிக்கையாக இருப்பதற்கு பாஸ்பரஸ் தேவை

இறைச்சி, மீன், முட்டை, பால் போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகம்

பொட்டாசியம் பெண்களுக்கு மிகவும் அவசியமானதொரு சத்துப் பொருளாகும். மாதவிடாய் ஆன காலங்களில் ஏற்படும் உலைவுகளைக் கட்டுப் படுத்தும் ஹார்மோன்கள் சுரக்க இது துணை செய்கிறது உடல் கழிவுகளை வெளியேற்ற பொட்டாசியம் உதவுகின்றது. தோலைப் பாதுகாக்கவும் பொட்டாசியம் காரணமாகின்றது எலுமிச்சை வகைப் பழங்களிலும், இளநீர், இறைச்சி, மீன், அத்திப்பழம் தானியங்கள், மிளகு போன்றவற்றிலும் இது அதிகமாகக் காணப்படுகிறது

தசை, நரம்பு மண்டலங்கள், இரத்த ஓட்ட அமைப்பு போன்றவைகளின் இயக்கங்கள் ஒரே சீராக நடைபெற்று வரவும், சுரப்பிகள் முறையாக இயங்கவும் சோடியம் காரணமாகின்றது. அளவிற்கு மீறி அதிகமாகச் சோடியம் உடலில் சேர்ந்தால் உடலில் கழிவுப் பொருட்கள் மிகுதியாகத் தங்கி விடுகின்றன

எனவே சோடியத்தை அளவாகச் சேர்த்து வருவது நல்லது. கடல் வழி உணவுப் பொருட்கள், பன்றி கோழி இறைச்சி இவற்றில் சோடியம் அதிகம்

இரும்பு இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு அவசியமான சத்தாகும். இரும்புச் சத்துக் குறைபாடு பொதுவாகப் பெண்களிடம் அதிகம் காணப்படுகின்றது. இதனால் மூச்சிறைப்பு, மயக்கம் மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தப்போக்கு, வெளுத்துப்போன கண்கள் போன்றவைகள் ஏற்படுகின்றன. உறுதியான முடிக்கும், நகங்களுக்கும் இரும்பு அவசியம். பச்சைக் காய்கறிகள், ஈரல் முட்டையின் மஞ்சள் கரு, திராட்சை, தானியங்கள் மற்றும் கடல்வழி உணவுப் பொருட்கள் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகமாகக் கிடைக்கிறது

செலினியம், வைட்டமின் ஈ யுடன் இணைந்து பயன் தருகிறது. உடலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், உடல் பொலிவைப் பேணவும் செலினியம் உதவுகின்றது. சீரண உறுப்புகள், செலினியத்தினால் சிறப்பாக செயலாற்றுகின்றன. சமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள், முட்டை, வெள்ளைப் பூண்டு, ஈரல் மற்றும் மீன் போன்ற உணவுப் பொருட்களில் செலினியம் அதிகம்

உடலில் ஏற்படுகின்ற வளர்சிதை மாற்றங்கள் பெரும்பாலும் தைராய்டு சுரப்பியைப் பொருத திருக்கின்றன. தைராயிடு சுரப்பியின் இயக்கத்திற்கு அயோடின் மிகவும் தேவை. அளவுக்கு மீறிய அயோடின் உடலில் சேர்ந்தால், உடலின் எடை குறைவுறுகிறது. தைராய்டு சுரப்பியின் செயல்திறன் மந்தப்படுத்தப்படுகின்றது. அயோடின் கடல் வழி உணவுப் பொருட்கள், வெங்காயம், மீன் எண்ணெய் ஆகியவற்றில் அதிகமாக உள்ளது

அதிகமாக பு, மயக்கம் நடப்பது ன்றவைகள் ங்களுக்கு

தோல், நகம் மற்றும் முடி இவற்றின் செழுமைக்கு கந்தகம் துணை மிகவும் அவசியம். தொற்று நோய்களுக்கு எதிர்ப்பு, மனநிலைத் தெளிவு ஆகியவற்றிற்கும் கந்தகம் துணை செய்கின்றது

முட்டை, மீன், பீன்ஸ், வெங்காயம், முட்டைக் கோசு போன்றவற்றில் காணப்படுகின்றது அதிகமாகக் கந்தகம்

மானியங்கள் பொருட்க

செல்கள் புதுப்பிக்கப்படவும், பழுதற்ற தோல் பகுதிகள் செம்மையுறவும் சீரணம் சீரக நடைபெறவும், உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறவும் துத்தநாகம் காரணமாக விளங்குகின்றது. இது கடல் கழி படுவதை செலிரியோ உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், தானியங்கள், துத்த நாக வளமுள்ள விளை நிலங்களில் பயிர் காய்கறிகள் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தொடர்ந்து மருந்து பொருட்களை உட்கொண்டு வந்தால் உடலில் துத்தநாகம் சேர்வது தடுக்கப்படுகின்றது. அப்போது துத்தநாக பற்றாக்குறை ஏற்படுகிறது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments