NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் -பழமொழிக்கதை

மேலையூர்
என்ற ஊரில் சடையாண்டி என்பவன் இருந்தான் ஏழையாக இருந்த அவன் தன் மனைவியுடன் குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான்

தெய்வ நம்பிக்கை கொண்டிருந்த அவன் தான் வறுமையில் வாடுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அவன் மனைவி ஏதேனும் சொன்னாலும் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்றே பதில் சொல் ஒரு நாள் அவன் வழக்கம் போல தன் நிலத்திற்கு சென்றான் வழியிலிருந்த முட்புதர் அவன் வேட்டியைக் கிழித்து விட்ட கோபம் கொண்ட அவர் தன் கையிலிருந்த மண் வெட்டியால் அந்த முட்புதரை வெட்டினான். இருந்தும் அவன் கோ அடங்கவில்லை. அந்த முட்புதரின் வேரைச் சுற்றி மண் வெட்ட வெட்டினான்

அங்கே புதைத்து வைக்கப்பட்டு இருந்த பாத்திரம் ஒன்று அவன் கண்களுக்குத் தெரிந்தது. ஆர்வத்துடன் அதைத் திறந்து பார்த்தான் உள்ளே ஏராளமான பொற்காசுகள் இருந்தது

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்

தெய்வம் எனக்கு அருள் செய்தது உண்மையானால் இந்தப் புதையல் என் வீட்டிற்குத் தானே வரட்டும். நான் இதை எடுத்துச் செல்ல மாட்டேன்' என்ற முடிவுக்கு வந்தான்

அந்தப் புதையலை எடுக்காமல் தன் வீட்டிற்குத் திரும்பினான் அவன். நடந்ததை எல்லாம் தன் மனைவியின் சொன்னான்

முட்டாளான அவன் தான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்று நினைத்தாள் அவள்

அவன் நன்றாகத் தூங்கி விட்டான் என்பதை அறிந்த அவள் எழுந்தாள். பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள்

பக்கத்து வீட்டில் குடி இருந்த ஏழுமலையும் அவன் மனைவியும் கதவைத் திறந்தார்கள்

அவர்களிடம் அவள் தன் கணவன் பார்த்த புதையலைப் பற்றிச் சொன்னாள். "இப்பொழுதே நாம் மூவரும் அங்கே செல்வோம் அந்தப் புதையலை எடுத்து வருவோம். அதைச் சமமாகப் பிரித்துக் கொள்வோம்" என்றாள் அவள்

வஞ்சகர்களாகிய அவர்கள் இருவரும் அந்தப் புதையலைத் தாங்களே எடுத்துக் கொள்ள நினைப்பார்கள்.

இது நள்ளிரவு நேரம், வெளியே திருடர்கள் நடமா கொண்டிருப்பார்கள். இப்பொழுது நாம் செல்வது நல்லது அ பொழுது விடிந்ததும் நாம் மூவரும் அங்கே செல்வோம். - புதையல் இங்கே கொண்டு வந்து பாதிப் பாதியாகப் பிரித்து கொள்வோம். அதற்கு அந்தப் புதையல் ஓடி விடவா போற என்று இருவரும் சொன்னார்கள்.

அவர்கள் சூழ்ச்சியை அறியாத அவளும் “சரி! பொழுது விடிந்ததும் நாம் மூவரும் அங்கே செல்லலாம். நான் இங்கே வந்தது என் கணவருக்குத் தெரிய வேண்டாம் தெரிந்தால் என்னைக் கொன்று விடுவார்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்

அவள் சென்றதும் ஏழுமலையும் அவன் மனைவியும் புதையல் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது

இருவரும் மகிழ்ச்சியுடன் அதைத் திறந்து பார்த்தார்கள். வானத்தில் விண்மீன்கள் ஒளி வீசின. அந்த மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே இருந்த பொற்காசுகள் அவர்களுக்குத் தெரியவில்லை. உள்ளே இருந்து பறந்து வந்த குளவிகள் அவர்களைக் கொட்டத் தொடங்கின

உடனே அவன் அந்தப் பாத்திரத்தைப் பரபரப்புடன் மூடினான்

இந்த நள்ளிரவு நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரி நம்மை நன்றாக ஏமாற்றி உள்ளார் இதற்குள் புதையல் ஏதும் இல்லை குளவிகள்தாம் கூட்டமாக உள்ளன. நாம் பட்ட துன்பத்தை அவளும் அவள் கணவனும் பட வேண்டும்

இந்தப் பாத்திரத்தில் உள்ளதை அவர்கள் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே கொட்டப் போகிறேன். இதில் உள்ள குளவிகள் அவர்களைக் கொட்டித் தீர்க்கப் போகின்றன. அவர்கள் வேதனை தாங்காமல் துடிக்கப் போகிறார்கள்" என்றான்

"அப்படியே செய்யுங்கள். அப்பொழுதுதான் அவர்களுக்குப் புத்தி வரும். மீண்டும் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்" என்றாள் அவள்

அதன்படியே அவன் அந்தப் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு சடையாண்டியின் குடிசைமேல் ஏறினான். கூரையைப் பிரித்த அவன் பாத்திரத்தைத் தலை கீழாகக் கவிழ்ந்தது

கலகல என்ற ஓசையுடன் பொற்காசுகள் சடையாண்டியின் வீட்டிற்குள் விழுந்தன. ஓசை கேட்டு சடையாண்டியும் அவன் மனைவியும் விழித்துக் கொண்டார்கள். வீட்டிற்குள் பொற்காசுகள் கொட்டிக் கிடப்பதைப் பார்த்தான் அவன்

மனைவியைப் பார்த்து அவன் "அடியே! கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்றேனே. நான் சொன்னது உண்மையாகி விட்டது. பார்த்தாயா என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive