தமிழகத்தில் DEO மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் எத்தனை?
தமிழகத்தில் 20 டி.இ.ஓ.,க்கள், 450 அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கல்வித் துறை உத்தரவுகளை செல்படுத்துவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
அமைச்சரின் தினம் ஒரு அறிவிப்புக்கள், தேர்வுத் துறையின் அடுத்தடுத்த உத்தரவுகள் என கொரோனா பேரிடரிலும் கல்வித்துறை 'பிஸி'யாக உள்ளது.
தற்போது புத்தகங்கள் வினியோகம், பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண், வருகை பதிவு கணக்கிடுவது, விடுபட்ட பிளஸ் 2 தேர்வுக்கு தயாராவது என மாவட்டங்களில் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களுக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது.
ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொது மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் 20க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள், 250 மேல்நிலை தலைமையாசிரியர், 250 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு ஆசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிப்பதால் உத்தரவுகளை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது.
பிற
துறைகளில் மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இத்துறையில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பினால் உத்தரவுகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...