நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் பெரும்பாலானோரின் கனவே ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது தான். அதனை விட அவர்களின் பெரிய ஆசையே இருக்க முடியாது எனலாம். அவரவர் நிலைக்கு ஏற்றவாறு வங்கிகளில் கடன் வாங்கியாவது ஒரு சிறிய வீட்டை கட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கனவாகவே இருக்கும். இப்படி வங்கிகளில் கடன் வாங்கி கட்டும் வீட்டுக்கடன், குறைந்த வட்டியில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
வீட்டுக்கடன் வேண்டுபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு
இப்படி எல்லாம் கனவில் கோட்டை கட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு சரியானதொரு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ். எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் அதன் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தினை இதுவரை இல்லாத அளவு குறைத்துள்ளது. அதுவும் உங்களின் சிபில் ஸ்கோர் ஆனது 700க்கும் கீழ் இருந்தால் கூட, 6.9% வட்டி விகிதத்திற்கு நீங்கள் தகுதியானவர் தான் என்றும் அறிவித்துள்ளது.
யாருக்கு எவ்வளவு வட்டி?
அடமான கடன் வழங்கும் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ், 50 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு, சிபில் ஸ்கோர் 700க்கும் மேற்பட்ட மதிப்பெண்களுடன், கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் 6.90%ல்
இருந்து தொடங்குகிறது. இதற்கு முன்பு வரை இவ்வளவு குறைவான வட்டி விகிதத்தினை குறைத்ததில்லை.
இ.எம்.ஐ குறையும் எனினும் உங்களது வீட்டுக்கடன் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்றால், 7% வரை வட்டி அதிகரிக்கலாம். இந்த வட்டி விகிதமானது இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் என்றும் எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த்த மொஹந்தி தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம் எவ்வளவு?
கடந்த ஏப்ரல் மாதத்தில், வீட்டுக் கடன் வழங்கும் இந்த நிறுவனம், சிபில் ஸ்கோர் 800க்கு மேல் உள்ளவர்களுக்கு, 7.5% மேல் வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த நிதி நிறுவனத்தின் ஆர்பிஐயில் இ எம் ஐ தடைகாலத்தின் கீழ் 25% குறைவான கடன்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...