தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2020 க்கு பதிவு செய்யும் முறை
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2020 ( TNEA - 2020 ) முழுமையாக இணைய வழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமையும் , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் , பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல் , விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல் , தற்காலிக இட ஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல் , முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையை பெறுதல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும் . சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள “ தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் ” ( TFC ) இணைய வழியாக விண்ணப்பதாரர்கள் இல்லாமல் நடத்தப்படும் . விண்ணப்பதாரர்கள் எல்லா செயல்களையும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதள வாயிலாக பதிவு செய்யலாம் . இணையதள வசதி இல்லாதவர்கள் , எல்லா சேவைகளுக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் . அங்கு அவர்களுக்குத் தேவையான எல்லா சேவைகளும் கிடைக்கும் , முழுமையான இணையவழி கலந்தாய்வு கீழ்க்காணும் பல அடுத்தடுத்த கட்டங்களைக் கொண்டது .
1. விண்ணப்பம் பதிவு செய்தல்
2. சமவாய்ப்பு எண் ( Random Number ) உருவாக்குதல் ( by TNEA Authority )
3. அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல்
4. பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் இணையவழியாக சான்றிதழ் சரிபார்த்தல் ( by TNEA Authority )
5. தரவரிசை வெளியிடுதல் ( by TNEA Authority )
6 , சேர்க்கைக்கான முன்பணம் செலுத்துதல்
7. விருப்பமான கல்லூரியையும் மற்றும் பாடப்பிரிவையும் பதிவு செய்தல்
8. குறிப்பிட்ட நாளில் தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல் ( by TNEA Authority )
9. இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல் ( by Candidate )
10. இறுதி ஒதுக்கீடு செய்தல் ( by TNEA Authority )
11. ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேருதல்
விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள எல்லா விபரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும் . எல்லாவற்றுக்குமான முதற்படி , விண்ணப்பத்தை பதிவு செய்தல் அதை எவ்வாறு செய்வது என்பதை இந்த குறிப்பு விவரிக்கிறது.
CLICK HERE TO DOWNLOAD
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...