தேசியக் கல்விக் கொள்கை - தமிழ் மொழியில் வெளியீடு.

IMG_20210426_140930
அறிமுகம் :

உலக கல்வியானது முழு மனித ஆற்றலை அடைவதற்கும் , நடுவுநிலையும் நேர்மையுமான சமுதாயத்தை வளர்க்கவும் , தேசிய வளர்ச்சியை மேம்படுத்தவும் அடிப்படை ஆகும் . தரமான கல்விக்கான அனைத்து அணுகுவழிக்கும் வகைசெய்வதானது பொருளாதார வளர்ச்சி , சமூகநீதி மற்றும் சமத்துவம் , அறிவியல் முன்னேற்றம் , தேசிய ஒருமைப்பாடு , பண்பாட்டைப் பேணிக்காத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அரங்கில் இந்தியாவின் தொடர் முன்னேற்றத்திற்கும் தலைமைநிலைக்கும் முக்கியமானதாகும் . முழுதளாவிய உயர்தரக் கல்வி ( universal high - quality education ) என்பது தனிப்பட்டவர் , சமுதாயம் , நாடு , உலகம் ஆகியவற்றின் நன்மைக்காக நமது நாட்டின் செழுமையான திறமைகளையும் வளஆதாரங்களையும் வளர்த்து உச்ச அளவாக்குவதற்கு மிகச்சிறந்த முன்னோக்கிய வழியாகும். இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் உலகிலேயே மிக அதிக இளம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். அவர்களுக்கு உயர்தரமான கல்வி வாய்ப்புகளை வழங்கும் நமது திறமை நமது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். 2015 - இல் இந்தியாவால் ஏற்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான ஆய்வுநிரல் 2030 இன் இலட்சியம் -4 ( SDG4 ) - இல் பிரதிபலிக்கிற உலகளாவிய கல்வி வளர்ச்சி ஆய்வுநிரலானது 2030 அளவில் “ உள்ளடக்கமும் நடுவுநிலையும் கொண்ட தரமான கல்வியை உறுதிசெய்வதையும் , எல்லோருக்கும் வாழ்நாள் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் " நாடுகிறது.

நீடித்த வளர்ச்சிக்கான ஆய்வுநிரல் 2030 - இன் முக்கிய இலக்குகளையும் ( targets ) இலட்சியங்களையும் ( goals ) எய்தக்கூடிய வகையில் , கற்றலை ஆதரித்துப் பேணுதற்காக , முழுக் கல்வி அமைப்புமுறைக்கும் மறுவுருக்கொடுக்கப்படவேண்டி , அத்தகைய மிகவுயர்ந்ததோர் இலட்சியம் தேவைப்படும்.

 New Education Policy 2020 - Tamil Translate file - Download here...

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive