Total Pageviews

பல ஆசிரியர்கள் திறமையை வெளிக்காட்டிய பாடசாலை

 பல ஆசிரியர்கள் திறமையை வெளிக்காட்டிய பாடசாலை!

 


அ, ஆ, . . . கற்க ஆரம்ப பாடசாலை

அனைத்தும் கற்க இணைய “பாடசாலை”.

ஆம், இணைய உலகில் ஒரு மைல் கல்.

கற்றோர்க்கான கலங்கரை விளக்கம்.

கற்போருக்கும் வழிகாட்டி.

கல்விக்கோர் விடிவெள்ளி.

மற்றோர்க்கு ஒரு இலட்சிய இலக்கு.

மொத்தத்தில் பாடசாலை கல்வி உலகில் ஆதவன்.

ஆர்வமூட்டும் ஆசிரியருக்கு ஒரு தூண்டுகோல்.

ஆர்வமுள்ள மாணவர்க்கு நல்லாசிரியன், நல்வழிகாட்டி.

கற்றதை அளவிட, கற்பித்ததை அளவிட உதவும் பாடசாலை

எண்ணற்றோர்க்கு நற்றுணையானது பாடசாலை.

கல்வி பசித்திருப்போருக்கு பசியாற்றும் பாடசாலை.

கற்றதை நினைவுகூர உற்றதுணை பாடசாலை.

கற்கத் தவறியதைச் சுட்டிக்காட்ட பாடசாலை.

மாணவர் உயர ஆசிரியர் உயர்வர பாடசாலை.

பல ஆசிரியர்கள் திறமையை வெளிக்காட்டிய பாடசாலை.

பல மாணவர் சிந்தனையைத் தூண்டிய பாடசாலை.

பல இணையதளங்கள் உருவாக வழிகாட்டிய பாடசாலை.

தன்னோடு சேர்ந்து பலரும் வளர துணை நிற்பது பாடசாலை.

கற்றோர்க்கும், கற்பிப்போருக்கும், கற்க விரும்புவோர்க்கும் ஒரே பாடசாலை.

கற்கும்போது, கற்றபின்பும்; உயரவும், உயர்ந்த பின்பும் பாடசாலை.

அறிவிற்கும், அனுபவத்திற்கும், உயர்விற்கும், மகிழ்விற்கும் பாடசாலை.

மாணவர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும் நோட்டமிடும் பாடசாலை.

என்றென்றும் உயர்கவே. உயர்க! உயர்க! உயர்கவே!

என்றென்றும் வளர்கவே. வளர்க! வளர்க! வளர்கவே!

என்றென்றும் வாழ்கவே. வாழ்க! வாழ்க! வாழ்கவே!

                                சிவ ரவிகுமார்

 





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive