Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02. 2022

  

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: நட்பு

குறள் எண்: 781

குறள்:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

பொருள்:
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

பழமொழி :

we can take a horse to water but can't it make it drink.


  தானாக கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால்  கனியுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்கள் நம்மை உருவாக்கும் எனவே என் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்க முயல்வேன் 

2. என் எண்ணங்களை உருவாக்குவது நான் வாசிக்கும் புத்தகங்களும் நல் ஆலோசனைகளுமே எனவே புத்தக வாசிப்பிலும் நல் ஆலோசனையிலும் நேரம் செலவழிப்பேன்

பொன்மொழி :

உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - ஐசக் நியூட்டன்

பொது அறிவு :

1. தமிழகத்தின் முதல் இரயில் நிலையம் எது? 

ராயபுரம், சென்னை. 

2. "தெற்கின் கைலாஷ்" என்றழைக்கப்படும் மலை எது? 

வெள்ளியங்கிரி மலை.

English words & meanings :

Delighted - cheerful, மகிழ்ந்திருத்தல், 

adventurous - bravo, துணிச்சல் மிக்கவர்

ஆரோக்ய வாழ்வு :

பசலைக்கீரையில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்கரைடுகள், உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படும். பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகிறது.

கணினி யுகம் :

windows key + Left arrow - Minimize / restore current windows. 

windows key + right arrow - The window on the right side of the screen.

நீதிக்கதை

ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின. சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. எதைத் துரத்தலாம் என்று தயங்கி நின்றது. பிறகு, சரி... கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும் என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது. 

உடனே சிறுத்தை அது வேகமாக ஓடக்கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி.... புள்ளி மானைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது. 

நீதி :
தருணத்தின் முக்கியம் அறிந்து முடிவை விரைவாக எடுக்க வேண்டியது அவசியம்.

இன்றைய செய்திகள்

09.02.22

¶ சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

¶ திருப்பத்துார் அருகே 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

¶ கால்நடை மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், திருப்பூர் மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

¶ தமிழகத்தில் தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய அரசு புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது.

¶ பொருளாதார தடை விதிப்பு தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் காரசாரமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

¶ ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து: செனகல் அணி முதல்முறையாக ‘சாம்பியன்’.

Today's Headlines

 ¶ The NEET Exemption Bill, passed unanimously in the Legislative assembly, was handed over to the  Governor.

 ¶ Stone tools dating back 5,000 years ago of Stone age have been found near Tirupattur.

 ¶ The 7.5 percent internal allocation ranking list for veterinary studies has been released.  In this, Tirupur student has taken the first place.

¶  According to the statistics of the Central Government, the  mortality rate of mother and child in Tamil Nadu is declining.

 ¶ The United States and Russia clashed at a UN Security Council meeting over the embargo.

 ¶African Cup of Nations: Senegal become champions for the first time.

 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive