'ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுத, கல்லுாரிக்கு மாணவர்கள் நேரில் வரக்கூடாது' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர்களுக்கு வரும், 10ம் தேதி முதல், 'ஆன்லைன்' வழி செமஸ்டர் தேர்வு நடக்கிறது. இதற்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: கல்வியியல் பல்கலை ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி, தேர்வுகள் நடக்கும். ஆன்லைன் வழி தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை, மாணவர்கள் செய்து கொள்ள வேண்டும். தேர்வு எழுத கருப்பு நிற, 'பால் பாய்ன்ட்' பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும். கல்லுாரிகள் நடத்தும் பயிற்சியில் பங்கேற்று, குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் யாரும் கல்லுாரிக்கு வரக்கூடாது.
தேர்வு துவங்குவ தற்கு 30 நிமிடங்களுக்கு முன், கல்லுாரியில் இருந்து ஆன்லைன் வழியில், வினாத்தாள் அனுப்பப்படும். பல்கலை இணைய தளத்திலும் காலை 9:30 முதல் 10:30 மணி வரை வினாத்தாள் இடம் பெறும். தேர்வு எழுதி முடித்த ஒரு மணி நேரத்துக்குள், விடைத்தாளை, 'ஸ்கேன்' செய்து, கல்லுாரி முதல்வருக்கு பி.டி.எப்., வடிவில் ஆன்லைன் வழியில் அனுப்ப வேண்டும்.
அசல் விடைத்தாள்களை தங்களுக்கான தேர்வுகளின் இறுதி நாள் அல்லது மறுநாளுக்குள், கல்லுாரி முதல்வருக்கு விரைவு அல்லது பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...