Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் 5 பானங்கள்

 ரத்த சர்க்கரை அளவு அதிகமாயிட்டே போகுதா? நீங்க குடிக்க வேண்டிய 5 பானங்கள் இதுதான்...


நீரிழிவு உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியா உலக அளவில் நீரிழிவு நோய் பாதிப்பில் முன்னணியில் இருக்கிறது. இதை என்ன தான் மருந்துகள் எடுத்துக் கொண்டு கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும் உணவுகளும் உணவுக் கட்டுப்பாடும் தான் நீரிழிவை கட்டுப்படுத்தவும் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவியாக இருக்கும்.


நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமானது உணவுக் கட்டுப்பாட்டு முறை தான். குறைந்த கலோரி உணவுகளும் குறைந்த கார்போ உணவுகளும் எடுத்துக் கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


அந்த உணவுக் கட்டுப்பாடு உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற சில இயற்கையான டீடாக்ஸ் பானங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம். அந்த நீரிழிவை கட்டுப்படுத்தும் பானங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.


நீரிழிவை கட்டுப்படுத்தும் துளசி நீர்


துளசி புனித தாவரமாக சொல்லப்படுகிறது. இந்த துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் சரியான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.


ஒரு 10 துளசி இலைகளை எடுத்து லேசாக கசக்கி, ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, நாள் முழுவதும் முடிந்தவரை சூடாகவோ அல்லது குளிராகவோ குடித்து வரலாம். இது நீரிழிவை கட்டுப்படுத்தும்.


நீரிழிவை கட்டுப்படுத்தும் இஞ்சி நீர்


இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன என்பது நமக்கு தெரியும். அதுமட்டுமின்றி, இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் துத்தநாகம் (ஜிங்க்) சத்து வெந்தயத்தில் அதிக அளவில் உள்ளது.


வெந்தயத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அதிகமாக இருக்கின்றன. இது ரத்தத்தில் உள்ள சர்க்க்ரையின் அளவை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.


இஞ்சியை தட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.


​நீரிழிவை கட்டுப்படுத்தும் வெந்தய நீர் 


சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என்று வெந்தயத்தை சொல்லலாம். இது இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க உதவுகிறது. அதிலும் முளைகட்டிய வெந்தயம் நீரிழிவை கட்டுப்படுத்தவும் இன்சுலின் சுரப்பை தூண்டவும் உதவுகிறது.


வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்துவிட்டு, வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.


நீரிழிவை கட்டுப்படுத்தும் இலவங்கப்பட்டை நீர்

 **இலவங்கப்பட்டை** கணையத்திற்கு இன்சுலின் சுரப்பை தூண்ட உதவுகிறது, இது நம்முடைய உடலில் குளுக்கோஸின் செயலாக்கத்தை ஊக்குவிக்கிறது. அதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.


அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் குடிக்கவும். அதோடு நாம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் காய்கறிகள் போன்றவற்றுடன் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலையும் குறைக்க உதவும்.


​நீரிழிவை கட்டுப்படுத்தும் வேப்ப நீர்.


நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு அதிசயங்களைச் செய்யக்கூடியது வேப்பிலை. ஆனால் அதன் கசப்புத் தன்மையால் நாம் அதை முற்றிலும் தவிர்க்கிறோம்.


ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேப்பம் குடிநீர் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வேப்ப இலைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.


7-8 வேப்ப இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சுவை கசப்பாகவும், காரமாகவும் இருந்தாலும், தொடர்ந்து குடித்து வரும்போது ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள்ளேயே இருக்கும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive