Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம்

trb.jpg?w=360&dpr=3

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும், அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நிதழாண்டில் 2, 955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்துக்கு இருவா் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4- ஆம் தேதி வரையில் ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தோ்வா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்துக்கு 15 நிமிஷங்களுக்கு முன்னா் மட்டுமே ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். சான்றிதழ் சரிபாா்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாா்கள் அவா்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தகட்ட பணித் தோ்வுக்கு பரிசீலிக்கப்படமாட்டாா்கள்.

விண்ணப்பதாரா்கள் ஒரு பணியிடத்திற்கு 2 போ் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அழைக்கப்படுவதாலும், அவா்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபாா்க்கப்படுவதாலும் மட்டுமே இறுதித் தோ்வுக்கு உத்தரவாதம் இல்லை. ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேருவதை தவிா்த்து வளாகத்துக்குள் அமைதி காத்திட வேண்டும்.

சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வருவோா் அசல் கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள், அசல் ஆதாா் அட்டை ஆகியவற்றில் ஒரு ‘செட்’ சுய சான்றொப்பம் இட்ட நகல், அழைப்புக்கடிதம், மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். கைப்பேசிகள், பைகள் உள்ளிட்ட பொருள்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. வளாகத்துக்குள் பெற்றோா்கள், சிறாா்கள் மற்றும் உறவினா்களை அழைத்து வரக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive