Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

Local Holiday - 08.09.2022 இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

1661756254321
  1. நாகப்பட்டினம் மாவட்டத்திற்குஉள்ளூர் விடுமுறை தொடர்பாக நாகப்பட்டினம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் :

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா  08.09.2022 வியாழக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்தும் அதனை ஈடு செய்திடும் விதமாக 24.09.2022 அன்று வேலை நாளாக அறிவித்தும் ஆணையிடல் தொடர்பாக  நாகப்பட்டினம் மாவட்டம் , பேராலய ஆண்டுப் பெருவிழா 29.08.2022 கீழ்வேளுர் வட்டம் , வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா முதல் 08.09.2022 வரை நடைபெறுவதை முன்னிட்டு அதன் முக்கிய நிகழ்வாக 08.09.2022 அன்று அன்னையின் பிறந்தநாள் விழா ( விருந்து ) நடைபெறுகிறது என்றும் , 08.09.2022 அன்றைய தினம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பார்வை கடிதத்தில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் மற்றும் பங்குத் தந்தை கோரியுள்ளார் . 2 - ல் காணும் பார்வை 1 இல் காணும் அரசாணை இணைப்பு பட்டியல் வரிசை எண் 9 - இல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் " வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருவிழா வருடாந்திர விருந்து ' - க்கு உள்ளுர் விடுமுறை அளித்திடவும் , மேலும் அதே மாதத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ சனிக்கிழமை நாளை பணி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் பார்வை 3 - ல் காணும் கடிதத்தின் வழியாக நாகப்பட்டினம் முதன்மைக்கல்வி அலுவலர் 08.09.2022 அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதாலும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வேலை நாள் என்பதாலும் புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நாளான 08.09.2022 அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும் அதனை ஈடுசெய்யும் விதமாக 24.09.2022 அன்று பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.


எனவே , மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் ( தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல் ) 08.09.2022 வியாழக்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும் , அதனை ஈடு செய்திடும் விதமாக எதிர்வரும் 24.09.2022 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து இதன் மூலம் ஆணையிடப்படுகிறது . மேலும் , மேற்கண்ட உள்ளுர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 ( Under Negotiable Instruments Act , 1881 ) இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட சார்நிலைக் வேண்டுமென்றும் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது .


2. உள்ளூர் விடுமுறை - சென்னை மாவட்டம் - திருநாள் சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - அறிவிப்பது தொடர்பாக CHENNAI மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் :


2008 ம் வருடம் முதல் சென்னை அரசாணையில் , ஓணம் திருநாளுக்கு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து , அதற்கீடாக அம்மாதத்திலோ அல்லது அதற்கடுத்த மாதத்திலோ ஒரு சனிக்கிழமையை பணிதாளாக அறிவிக்க மாவட்ட தலைவர் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது . அதன்படி வருகின்ற 08.09.2022 ( வியாழக்கிழமை ) அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறைக்கு அளிக்கப்படுகின்றது . 


மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 17.09.2022 சனிக்கிழமையினை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை மற்றும் மாற்றுப்பணி நாளினை முறையாக அனுசரிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . 


        -  திருமதி.சு.அமிந்த ஜோதி . இ.ஆ.ப .. மாவட்ட ஆட்சியர் , 


            சென்னை மாவட்டம் , 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive