Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

செப். 10 இல் ஜாக்டோ ஜியோ மாநாடு! அதற்கு முன் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டம்



 

செப். 10 இல் ஜாக்டோ ஜியோ மாநாடு! அதற்கு முன் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு? அன்பில் மகேஷ் திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற போது, அன்பில் மகேஷுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கப்பட்டது.

அவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், ஒரு சில சம்பவங்களைத் தவிர பெரும்பாலும் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை

அதேநேரம் தேர்தல் நேரத்தில் துறை ரீதியாக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக வாக்குறுதிகளை அளித்து, திமுக அரசு பிரசாரம் செய்தது. அதன்படி பள்ளிக் கல்வித் துறைக்கும் பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்பாகப் பல வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. மற்ற துறைகளில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் கூட பள்ளிக்கல்வித் துறையில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஜாக்டோ ஜியோ

இதற்கிடையே ஜாக்டோ ஜியோ மாநாடு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனால் முதல்வர் மாநாட்டில் பங்கேற்கும் முன்பே, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறார் அன்பில் மகேஷ்! இதற்காக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டது.

மாநாடு

அதில் சுமார் 15 கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநாட்டிற்கு முன்பே இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பிடிஆரை சந்தித்து 15 வகையான கோரிக்கைகள் குறித்து அன்பில் மகேஷ் வலியுறுத்த உள்ளார்.

15 கோரிக்கைகள்

171 தொழிற்கல்வி ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது, ஐந்தாம் வகுப்பு வரை கூடுதல் ஆசிரியர்களைப் பணி அமர்த்துவது, மாதிரி பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வது, கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது, மாணவர் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர்களை எடுப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார். மேலும், அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை ரத்து செய்வது குறித்து வலியுறுத்த உள்ளார்.

ரத்து

அதிமுக ஆட்சியில் வெளியான அரசாணைகள் 101 , 108 ரத்து என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், மிக முக்கியமான கோரிக்கைகள் ஆன பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த கோரிக்கையும் இதில் இடம்பெறாது என்ற கூறப்படுகிறது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive