1.10.2022
அன்று நடைபெறவிருக்கும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , தற்போது
பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ஊக்கத்தொகை பெறும் பொருட்டு
2022-23 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.
மேற்படி
தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு 100 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து
வினாக்களும் கொள்குறி வினாக்களாக அமையும் . ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு
மதிப்பெண் வழங்கப்படும்.
மேற்படி வினாக்கள்
பத்தாம் வகுப்பு நிலையின் அடிப்படையில் அமையப்பெறும் . இலக்கணம் , அற
இலக்கியம் , சங்க இலக்கியம் , தற்கால இலக்கியம் , உரைநடை மற்றும்
துணைப்பாடம் ஆகிய தலைப்புகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுத்தல் ,
பொருத்துக , பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுத்தல் , சரியான / தவறான கூற்றைத்
தேர்ந்தெடுத்தல் , கூற்று / காரணம் வினாக்கள் போன்ற வினாக்கள்
கேட்கப்படும்.
மேற்படி தேர்வில் தேர்ச்சியுற்று
தேர்ந்தெடுக்கப்படும் 1500 தேர்வர்களுக்கு மாதம் ரூ .1500 / - வீதம்
இரண்டாண்டுகளுக்கு உதவித் தொகை தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக
வழங்கப்படவுள்ளது.
மேற்படி தேர்விற்கு , அரசுப்
பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளி / தனியார் பள்ளி / CBSE / ICSE பள்ளிகள்
சார்ந்த மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
09.09.2022
அன்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும் . எனவே , மாணவர்கள்
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வெழுதி ஊக்கத்
தொகை பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...