தமிழக
அரசின் துறை வாரியான திட்ட பணிகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
அனைத்துத்துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி
வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை
செயலாளர் இறையன்பு, முன்னோடியாக கலந்து கொண்டுள்ளார்.
நிதிநிலை
அறிக்கை, திட்டங்களின் நிலை என்ன, கூடுதலாக எடுக்கப்பட வேண்டிய திட்டங்கள்
என்ன? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2022- 23ம் ஆண்டு
நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் துறைசார்ந்து
எந்த நிலையில் இருக்கின்றன? அதற்கான நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது?
திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா? முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள்
எத்தனை? உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடைபெறவுள்ளது.
துறைவாரியான திட்ட பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையிலான அனைத்துத்துறை செயலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும் பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...