‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்’: குஜராத்தில் கேஜரிவால் வாக்குறுதி

ak20.JPG?w=360&dpr=3

குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது.

தில்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கேஜரிவால், வதோதராவில் இன்று பேசியதாவது:

“குஜராத்தில் பல நாள்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத்தில் ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே அமல்படுத்துவோம்.

நாங்கள் பணவீக்கத்தை ஒழித்து, மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவோம் என்றும், மின்சாரத்தை குறைந்த விலையில் கொடுப்போம் என்றும் வாக்குறுதி அளிக்கிறோம்.

பாஜக மீது பரிதாபப்படுகிறேன். பாஜகவை போன்று உபயோகம் இல்லாத கட்சியை ஒருபோதும் நான் பார்த்ததில்லை.

இந்த கட்சிகள் 75 ஆண்டுகளில் செய்யாததை பகவந்த் மான் வெறும் 6 மாதங்களில் செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால் வேளாண் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive