திருப்பத்தூரில் கொடூரம்! தலைமை ஆசிரியை வெட்டிப் படுகொலை!

 திருப்பத்தூரில் கொடூரம்! தலைமை ஆசிரியை வெட்டிப் படுகொலை!


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதம் (வயது 52).
இன்று (புதன்கிழமை) இவர் பள்ளிக்கு வராத நிலையில், வேறு தகவலும் அவர் தெரிவிக்காத காரணத்தினால் சக ஆசிரியர்கள், அவரது வீட்டிற்கே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது, ரஞ்சிதம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்தது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோர் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவரது கணவர் ராஜேந்திரன் ஏற்கனவே காலமாகிவிட்டார். இவரது மகன் அம்பேத்கர் பாரதி, கோயம்புத்துார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் அபிமதி பாரதி திருமணம் முடிந்து, பட்டுக்கோட்டையில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ரஞ்சிதம், செவ்வாய்க்கிழமையன்று இரவு வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இவரை அரிவாளால் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியையின் உடலைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive