Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Regular Ceo கூடுதலாக பார்க்கும் பணிகள்

தமிழக முழுவதும் உள்ள 37 மாவட்டங்களுக்கு கூடுதல் முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மு.முருகேசன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தையும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக தற்போது செயல்பட்டு வருகிறது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களே கூடுதலாக இந்தத் திட்டங்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

கடந்த ஆட்சிக் காலத்தில் கூடுதலாக உள்ள முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தை எடுத்துவிட்டனர்.

உதாரணமாக தமிழக அளவில் 413 வட்டார வளமையங்களும் 4300 -க்கும் மேற்பட்ட குருவலமையமும் உள்ளன. இவை அனைத்தையும் பராமரிக்க வேண்டிய வேலை கூடுதல் முதன்மை கல்வி அலுவலருக்கு உண்டு

குறிப்பாக பள்ளியின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது,

பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் மீண்டும் சேர்ப்பது கட்டிடங்களுக்கு நிதி ஒதுக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக முயற்சி எடுப்பது, மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை வடிவமைப்பது, மாணவர்களை மதிப்பீடு செய்வது, மதிப்பீடு செய்யப்பட்ட தரவுகளின் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கொள்கையை வகுப்பது புதிய பள்ளிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, பள்ளிகளை தரம் உயர்த்துவது,

குறிப்பாக ஒரு கிலோமீட்டருக்குள் தொடக்கப் பள்ளியை உருவாக்குவது மூன்று கிலோ மீட்டருக்கு நடுநிலைப் பள்ளியை உருவாக்குவது ஐந்து கிலோ மீட்டருக்கு உயர்நிலைப் பள்ளியை உருவாக்குவது ஏழு கிலோ மீட்டருக்கு மேல்நிலைப் பள்ளியை உருவாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வது,

உதாரணமாக ஒரு மாணவருக்கு ஐந்து கிலோ மீட்டரில் உயர்நிலைப் பள்ளி இல்லை என்றால் மாணவர்களின் இடை நிற்றல் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசுக்கு ட்ரான்ஸ்போர்ட் செலவுக்கு மாணவனுக்கு பணம் கொடுத்து வாகனத்தை ஏற்பாடு செய்து கல்வியை கற்க மேற்கொள்வது (மாதம் 300 ரூ ).குறிப்பாக மலை கிராமங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு போக்குவரத்தை ஏற்படுத்தி கல்வியை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்வது,

கட்டடம் பராமரிப்பு பணி, பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது,

அக்குழந்தைகளுக்கு பயிற்சி மையங்களை ஏற்படுத்தித் தருவது,

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முகாம் நடத்துவது, .அவர்களுக்கு அடையாள அட்டை வாங்கி கொடுப்பது அவர்களது ஊனத்திற்கு தேவையான செயற்கை உபகரணங்களை பெற்று வழங்குவது பள்ளி மேலாண்மை குழுவைஉருவாக்குவது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது,

எமிஸ் பணிகளை மேற்கொள்வது, பள்ளிகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தருவது,

ஹை டெக் லேப் வசதியை பெற்று தருவது, அடுத்து ஹைடெக் லேபில் தேர்வு வைத்து மதிப்பீடு செய்வது,

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை செயல்படுத்தி பெண் குழந்தைகளை உயர்கல்வி படிக்க முயற்சி எடுப்பது

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடை பெற்று வழங்குவது போன்ற எண்ணற்ற பணிகளை கொண்டது ஒருங்கிணைந்த பள்ளித்திட்டத்திற்கு, ஒரு ரெகுலர் முதன்மை கல்வி அலுவலரே மேற்கொள்வதால்,பள்ளிப் பார்வை, பள்ளி ஆய்வு தேர்வுப்பணி, மற்றும் கல்விசார் பணிகளை சரிவர செய்ய முடியாமல் இருக்கிறது.ஆகவே கடந்த ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறையான கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தை நியமித்து பள்ளிக் கல்வியை சிறப்பாக மேற்கொள்ள இந்த ஆண்டிலே நிரப்ப வேண்டும் எனதகவல் தெரிவித்துள்ளார்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive