மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்கள் தள்ளுபடி: SBI அறிவிப்பு!

பாரத ஸ்டேட் வங்கி(SBI) மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான குறுஞ்செய்தி(SMS) கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களிடையே மொபைல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.

USSD சேவைகளை பயன்படுத்தி பயனாளிகள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் வசதியாக பணப் பரிவர்த்தனை செய்யலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி;

மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்களை இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, பயனாளிகள் தற்போது எந்த கட்டணமுமில்லாமல் வசதியாக  பணப் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அனுப்புதல், கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் மற்றும் UPI பின்னை மாற்றுதல் உள்ளிட்ட எந்த கூடுதல் செலவும் இல்லாமல் பயனர்கள் சேவை பெற முடியும் என SBI அறிவித்துள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive