Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு வரியில் தமிழகம்

ஒரு வரியில் தமிழகம்

உலகிலேயே புன்னைக்காயலில் தான் தமிழ் மொழி அச்சுப் பணிக்காக உருவாக்கப்பட்ட முதல் அச்சுக்கூடம்.

இந்தியாவின் வரைபடத்தில் இலங்கை இருப்பது ஏன்?

இந்திய எல்லையிலிருந்து 200 நாட்டில் மைல் தொலைவில் இலங்கை நாடு உள்ளதால் இலங்கையின் வரைபடம் இந்திய வரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழர்களை , வீழ்த்த எடுக்கப்பட்ட ஆயுதம்தான் பண்பாட்டு படையெடுப்புகள்

தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்றது வெண்ணிரை ஆடை மட்டுமே.

தமிழக அரசுப்பள்ளி  வகுப்பறையில் "உள்ளேன் ஐயா" (Present sir) என்ற முறையை கொண்டுவந்தவர் பேரா.சி.இலக்குவனார்.

தனிக்குறிப்பு:  டாக்டர்.கலைஞர் கருணாநிதி இவருடைய மாணவர்

கொறத்தலையார் ஆறு, எண்ணூர் சிறுகுடா மற்றும் வங்காள விரிகுடா கடல் என முப்புறமும் நீர் சூழ்ந்த தீபகற்ப நிலப்பகுதியாக விளங்குகிறது எண்ணூர்

தமிழக கோயில் கட்டிடக்கலையின் மூலமாக அமைந்திருப்பது மாமல்லை

தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் வாணிதாசன்

நவகண்டம் - ஒன்புது உடல் பாகங்களை அறுத்துத் தன்னையே பலி கொடுக்கும் முறை தமிழகத்தில் 11- 13 ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளது.

1947 - 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் ஆளுகைக்குள் இருந்த கன்னியாகுமரி நவம்பர் 1 - 1956 முதல் குமரி மாவட்டம் என தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

ஆசாரக்கோவை நூறு வெண்பாக்களைக் கொண்டது.

ஸ்ரீரங்கம் அனைத்து கோபுரங்களும் வண்ணமயமாக இருக்க கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையம்மாளுக்காக வெள்ளையாக இருக்கின்றது.

அரக்கோணம் பழங்காலப் பெயர் அரும்தமிழ் குன்றம்.

பாரதி இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை சுமந்தவர்களையும் சேர்த்து பதினொன்று.

டச்சுப்படையை வென்ற முதல் தமிழன் வீரத்தளபதி மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார்.

ஓவியர். திரு.கிருஷ்ணாராவ் வடிவமைத்த தமிழகச் சின்னம் மதுரை அங்கையர்க்கண்ணி (மீனாட்சி)  கோயிலில் மேற்கு கோபுரத்தை அடிப்படையாகக் கொண்டது. 

தமிழகச் சின்னத்தில் இருக்கும் கோபுரம் தமிழகத்தின் திராவிட கட்டிடக்கலையை பறைசாற்றுகிறது.

செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெரியார் தனது பெயரிலிருந்து நாய்க்கர் என்ற சாதிப் பட்டத்தை நீக்குவதாக அறிவித்தார்.

1929 ஆண்டு

நாட்டில் தமிழகம் அதிகபட்சமாக *14 ராம்சார்* தளங்களை கொண்டு முன்னிலையில் உள்ளது.

பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் மடை நூல்

மைசூர் முன்றாம் போர் வரலாற்றை அமைதியாக சுமந்து நிற்கின்றது இராயக்கோட்டை.

கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டியவர் இந்திய நீர் பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன்.

நீதிக்கட்சியால் அமைக்கப்பட்ட தியாகராய நகர் பனகல் பூங்கா ஒரு அரை வட்ட வடிவில் இருக்கும் சூரியனைக் குறிப்பது போல அமைக்கப்பட்டது.

தெற்கு உஸ்மான் சாலை, 

வடக்கு உஸ்மான் சாலை, 

ஜிஎன் செட்டி சாலை, 

தியாகராய சாலை மற்றும் 

வெங்கடநாராயணா சாலை

தமிழக கோயில்களில் தலவிருட்சம் மரம் அமைத்தவர் கோச்செங்கணான் எனும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்.

குறிப்பு : 

தில்லைக்குத் தில்லை, 

மதுரைக்குக் கடம்பம், 

காஞ்சிக்கு மா, 

குற்றாலத்திற்குக் குறும்பலா

சோழ மண்டலத்தில் சிறிய நிலப்பகுதியானது மா என்றும் பெரிய நிலப்பகுதி வேலி என்றும் அழைக்கப்பட்டது.

திராவிட கட்டிக்கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு தஞ்சை பெரிய கோயில்.


தமிழகத்தில் இயங்கும் 26 சிமெண்ட் தொழிற்சாலைகளில் 7 அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 


தமிழகத்தில் *89* வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. 


மரம், விலங்கு , தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் (fossil) அரியலூரில் காணக்கிடைக்கின்றன.


தமிழக கோயில் கட்டிடக்கலையின் மூல நூல்கள் கிடைக்கவில்லை. 


தமிழகத்தில் பாண்டிய நாட்டு மிக பழமையான ஓவியங்களை  காணக்கூடிய இடம் சித்தன்னவாசல்


தொடரும்....

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive