NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2023

     

பானு அத்தையா

திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:309

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

விளக்கம்:

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.


பழமொழி :

Habit is a second nature

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி :

உழைப்பின் சக்தியே
உலகிலே உயர்ந்த சக்தி..
அதை வெற்றி கொள்ளும்
ஆற்றல் வேறெந்த
சக்திக்கும் கிடையாது.

பொது அறிவு :

1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: பானு அத்தையா

2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்?

விடை: ஜவகர்லால் நேரு

English words & meanings :

 Additional Assistance - கூடுதல் உதவி, 

Adventure Sports - சாகச விளையாட்டு

ஆரோக்ய வாழ்வு : 

பூசணிப் பூ: பூசணி பூவில் உள்ள வைட்டமின் C சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

நீதிக்கதை

 ஒன்றென்று உணர்ந்தால் நன்று


ஒருமுறை உடம்பின் உறுப்புகள் எல்லாம் வயிற்றின் மேல் பொறாமை கொண்டன. உணவு எங்கே இருக்கிறது? என்று கண்டு பிடிப்பவன் நான் என்றது மூக்கு. அந்த உணவை எடுப்பவன், ஆக்குபவன் நான் என்றது கை. அதை வயிற்றுக்கு அனுப்புபவன் நான் என்றது வாய். அதை அரைத்துக் கொடுப்பவர்கள் நாங்கள் என்றன பற்களும் நாக்கும். இந்த வயிற்றுக்காக நாம் இப்படிப் பாடுபடுகிற பொழுது இந்த வயிறு என்ன செய்கிறது? சுகபோகமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இனி நாம் எதுவும் செய்யக் கூடாது, என வயிறு தவிர மற்ற உறுப்புகள் போராட்டத்தில் இறங்கின. உணவு இல்லை என்றால், அந்த உறுப்புகள் என்ன ஆகும்? கண்கள் பஞ்சடைந்தன. கால்கள் வலுவிழந்தன. கைகள் சோர்ந்தன. பாதங்கள் நடுங்கின. மூக்கில் மூச்சு திணறியது. இப்படி ஆனபிறகு தான் அந்த உறுப்புகளுக்கு "தாங்கள் வயிற்றுக்கு அனுப்பும் உணவில் பயன் பெறுவது வயிறு அல்ல, தாங்கள் தான்" என்ற உண்மை புரிந்தது. தங்களது அறியாமையை எண்ணி அவை வருந்தின.


நீதி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

இன்றைய செய்திகள்

29.11.2023

*பராமரிப்பு காரணமாக கடற்கரை தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து.

* மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு.

* 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டாம் தேதி புயலாக மாறுகிறது.

* நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்; அண்ணாதுரை பேட்டி.

* முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

* மும்பை இந்தியன்ஸ் unfollow செய்த பும்ரா; சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி.

Today's Headlines

*Chennai Beach to Tambaram night train canceled from tomorrow due to maintenance.

* Government decided to relax norms for burial in cemeteries.

* Chance of heavy rain in 10 districts. The depression becomes a storm on 2nd December 

*We have to Establish an International Space Station on the Moon:  Annadurai during an interview.

* The first choice for investors is Tamil Nadu, Chief Minister M.K. Stalin.

* Bumrah unfollowed the Mumbai Indians; Fans are happy with the news that he is going to join CSK.

 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive