ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அந்த வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. 2024ம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 5வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை.யுபிஐ பரிமாற்றம்சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வபோது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக பணப்புழக்கம் கொண்டது மற்றும் அதிக மதிப்பில் பணப்பரிமாற்றம் செய்யும் இடம் என வகைப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இனிமேல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றத்தின் அளவு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...