AIFETO..….. 12-12-2023
தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு
எண்:36/2001
தமிழ்நாட்டில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இரண்டாம் பருவ தேர்வு ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை நாளை தொடங்க உள்ளது.EMIS இணையதளத்தின் பதிவுகளிலிருந்து ஒன்று முதல் மூன்று வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு வைப்பதில் இருந்து விடுபட்டாலும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதிலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை.
ஒரே சமயத்தில் மதியம் 2 மணிக்கு மேல் இன்று வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.தொடக்க நிலை பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளுக்கு சென்று பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.அதை இரும்பு பெட்டகத்தில் அவ்வினாத் தாள்களை பூட்டி வைத்து நாளை தேர்விற்கு மட்டும் வெளியே எடுத்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்!!!!
CBSE தேர்வை விட, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வை விட , இந்த எண்ணும் எழுத்துத் தேர்வு கொடிக் கட்டி பறக்கிறது!!!!!. உயர்ந்து நிற்கிறது.ஒரே சமயத்தில் இரண்டு மணிக்கு வினாத்தாள்களை Download செய்ய வேண்டுமென்றால் சர்வர் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த நிலைமைகளை பற்றி கூறினார்கள். மேலும் இதை பற்றி எல்லாம் வரும் பல்வேறு மீம்ஸ் செய்திகளை எல்லாம் தொகுத்து மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும், மதிப்புமிகு SCERT இயக்குநர் அவர்களுக்கும், இந்த நிலையினை தொகுத்து அனுப்பி உள்ளோம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் அலுவலகமும், SCERT இயக்கமும் மத்திய அரசு தேசியக் கல்வி கொள்கையைதான் பல்வேறு கோணங்களில் அமல்படுத்தி வருகிறார்கள் என்பதை நாம் அடிக்கடி உதாரணங்களுடன் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தொடக்கக் கல்விக்கு பொதுத் தேர்வே வேண்டாம் என்பது நமது கொள்கை முடிவாகும். ஆனால் 1,2,3,4,5ம் வகுப்புகளுக்கு நான்கு விதமான வினாத்தாள்கள் தரப்படுகிறது.எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு வித்தியாசமான தேர்வுமுறை சோதனைமுறை கற்றல் கற்பித்தலில் கொடுமை நிகழ்த்தப் பட்டு வருகிறது.
அரும்பு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வினாத்தாள், மொட்டு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வினாத்தாள்,மலர் மாணவர்களுக்கு ஒரு வினாத்தாள், நான்காவது வினாத்தாள் வகுப்புநிலை வினாத்தாள்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா!!!!!
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் !!!!¡
-என்றார் பாரதியார்
பாரதியார் பிறந்த நாளில் கூட தமிழ்நாட்டில் மாணவர்களை தரம் வாரியாக பிரித்து பார்க்கும் கொடுமை தேவைதானா? நெஞ்சு பொறுக்குதில்லையே!!!!!
போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் பிள்ளைகளை ஒரு வகுப்பிற்கு நான்கு பிரிவாக பிரித்து வினாத்தாளை நடத்துவது என்று சொன்னால் கல்வியில் சமூக நீதி உண்டா? அந்த மாணவர்களின் மனநிலை எப்படி பாதிக்கப்படும்.
நிதி ஒதுக்கீட்டுக்கு செலவு செய்ய வேண்டுமென்றால் எந்த பாவத்தையும் தமிழ்நாட்டில் செய்ய தயங்க மாட்டார்கள்.இது தான் உண்மையிலும் உண்மை.நம்மை பொறுத்தவரையில் இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் முற்றிலும் கைவிட படும் வரையில் நாம் போர்க்குணத் தோடு வீதிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டில் கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கொள்கை முழக்கத்தை காப்பாற்ற முடியும்
புத்தகத்தை வைத்து பாடம் நடத்துகின்ற நடைமுறை என்று தொடங்குகிறதோ, அன்று தான் இதுபோன்ற பருவ தேர்விற்கெல்லாம் ஒரு முடிவினை கட்ட முடியும்
இவர்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இந்தத் திட்டத்தினை அறிமுக படுத்தட்டும்.
ஏழை பிள்ளைகள் தான் இவர்களுக்கு கிடைத்தார்களா?என்ற கேள்வி எல்லாம் மக்கள் மத்தியில் இருந்து வெளிவரத்தான் செய்கிறது.
12 ஆண்டு காலமாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனமே தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்பது உங்களுக்கெல்லாம் தெரியாதா?
மறந்து விட்டீர்களா? கூச்சப்பட வேண்டாமா?
இனி ஒரு விதி செய்வோம்!!!!!!! எண்ணும் எழுத்தும் திட்டம் கைவிடப் படும் வரை நமது உரிமை குரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கட்டும்!!
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.
தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...