ஸ்டீபன் ஹாக்கிங் |
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
விளக்கம்:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
Like father like son
தந்தை எவ்வழி, தமையன் அவ்வழி
இரண்டொழுக்க பண்புகள் :1
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.ன்.
பொன்மொழி :
மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், சுதந்திரத்தின் ரகசியம் தைரியம். --கேரி ஜோன்ஸ்
பொது அறிவு :
1. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்?
2. தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது?
பாளையங்கோட்டை
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
முருங்கை கீரை : முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.
ஜனவரி 08
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[4][5] இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.
நீதிக்கதை
ஐந்தில் வளைக்காதது...
ஒரு சிறுவன் பள்ளியில் படிக்கும் போது அருகில் இருந்த ஒருவனின் பாடப் புத்தகத்தைத் திருடினான். அதை வீட்டிற்குக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தான். அம்மா அவனை அடித்துத் திருத்தாமல் இந்த மாதிரித் திருடுமாறு ஊக்கப்படுத்த வேறு செய்தாள்.
அடுத்த முறை அவன் ஒரு கடிகாரத்தைத் திருடிக் கொண்டு வந்தான். அம்மாவிடம் கொடுத்தான். அம்மா இம்முறையும் அவனை ஊக்கப்படுத்தினாள்.
இளைஞனானதும் அவன் ஒரு பண்ணைக்குச் சென்று அங்கிருந்த மதிப்பு மிக்க பொருள்களைத் திருடினான். ஆனால் கடைசியில் பிடிபட்டான். கைகள் பின்னால் கட்டப்பட்டு அவன் ஊர்ப் பொது இடத்திற்கு அழைத்து வரப்பட்டான்.
அங்கே அவன் காவலர்களால் தண்டிக்கப்பட்டான். அதை அறிந்த அம்மா அங்கே அலறிக் கொண்டு ஓடி வந்தாள். மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அவன் "அம்மா, நான் உன் காதில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அருகே வா," என்றான்.
அவள் அவன் அருகே போனதும் அவள் காதுகளைக் கடித்துத் துப்பினான். "என்னடா இப்படிச் செய்கிறாய், உனக்குப் பேய் பிடித்து விட்டதா ?" என அம்மா கேட்ட போது "அம்மா நான் முதன் முதலாகப் பாடப் புத்தகத்தைத் திருடி வந்து உன்னிடம் கொடுத்த போது நீ என்னை அடித்துத் திருத்தி இருந்தால்.... இப்போது ஊரார் என்னை இப்படி அடித்திருக்க மாட்டார்கள். இப்படி ஒரு இழிவான மரணமும் எனக்கு வந்திருக்காது" எனச் சொல்லி விட்டு அவன் இறந்தது போனான்.
நீதி: தவறு சிறியதாய் இருக்கையிலே திருத்திக் கொள்ள வேண்டும். அது போல சிறுவர்கள் சிறு சிறு குற்றங்கள் செய்கிற போது கண்டித்துத் திருத்த வேண்டும்.
இன்றைய செய்திகள்
Rrrrrrr4
ReplyDelete