Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்

 

💥 *மகளின் நினைவாக ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்

💥மதுரை: இறந்த மகளின் நினைவாக பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மதுரை வங்கி ஊழியர்

💥மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன்.

இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது தாம் பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரைஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார் வங்கி ஊழியரான பூரணம்.
 
💥கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தற்போது 142 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் உள்ளனர்.

💥இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதை கேள்விப்பட்ட வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான தற்போது ரூ.4 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு இடத்தை தனது மகள் ‘ஜனனி’ நினைவாக அரசுக்கு ஜன.5ல் தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தார்

💥அதனையொட்டி அதற்கான பத்திரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி, தலைமையாசிரியர் சம்பூர்ணம் முன்னிலையில் ஒப்படைத்தார்.   

💥இதுகுறித்து வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் கூறியது: “நான் பிறந்தது கொடிக்குளம். அப்பா எனக்கு வழங்கியது ஒன்றரை ஏக்கர் நிலம். எனது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கி ஊழியர்.

💥எனது மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது எனது கணவர் 31 ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்தார். எனது மகளை பி.காம் வரை படிக்க வைத்து 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தேன். 

💥குடும்பப் பிரச்சினையால் எனது மகள் இறந்தபோது நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்யுமாறு கூறினார். எனது கணவர் இறந்தபோது எனது மகளுக்காகவே வாழ்ந்தேன்.    

💥எனது மகள் இறந்தபோது யாருக்காக வாழ்வது என நினைத்தேன்.


💥அவர் சொன்னதுபோல் தான, தர்மங்கள் செய்யவே வாழ்ந்து வருகிறேன். கடந்த 1998-ல் எனது சகோதரருக்காக ஒரு கிட்னியும் வழங்கி ஒரு கிட்னியுடன் வாழ்ந்துவருகிறேன்.   

💥எனது மகள் சொன்னபடி கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளேன்.

💥இதன் மூலம் எனது மகள் உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன். வெளியில் தெரியாமல் பல தர்ம காரியங்கள் செய்துவருகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive