தமிழ் வழியில் படித்தவர்களின் உணர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அவமதித்துள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட, 229 பேருக்கு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணியாணை வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களின் உணர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அவமதித்திருக்கிறது;
இது கண்டனத்திற்குரியது.நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் இன்று வெளியாகும் நாளை வெளியாகும் என்று ஒவ்வொரு நாளையும் கடுமையான மன உளைச்சலுடன் தேர்வு எழுதியவர்கள் கடக்கின்றனர்.
அவர்களில் பலருக்கு நாற்பது வயதுக்கும் மேலாகி விட்டதால் வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே தமிழ் வழியில் படித்து சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு உடனடியாக பணியாணை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...