காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஜேஜே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக இருப்பவர் குருமூர்த்தி. இன்று பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு பாடம் தொடர்பாக தேர்வு வைத்தார் . அப்போது ஒரு மாணவன் தேர்வு எழுதாமல் சக மாணவனை பார்த்துக் கொண்டிருந்தான் அவனை தேர்வு எழுதும் படி ஆசிரியர் அறிவுறுத்தினார் "இன்னும் அதிகமா சமோசா சாப்பிடுங்க, அப்பதான் உங்க வயிறு இன்னும் குண்டாகும்" என்று அந்த மாணவன் ஆசிரியரை கேலி செய்தான். மாணவனை ஆசிரியர் எச்சரித்தார் . ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியர் கன்னத்தில் பளார் என அறைந்தான். அவன் கையில் அணிந்திருந்த மோதிரம் அவரது காதில் பட்டு ரத்தம் வழிந்தது. மாணவன் தப்பி ஓடினான். ஆசிரியர் குருமூர்த்தியை மீட்ட ஆசிரியர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிசேர்த்தனர் . .போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...