தமிழ்நாட்டில்
6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
வழங்கியுள்ளது. புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்
கூட்டம் மே 6ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலர்
ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில்
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம்
அனுமதி வழங்கியுள்ளது.
மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது; பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2 வது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...