சே குவேரா |
பால் :பொருட் பால்
அதிகாரம்: கல்வி
குறள் எண்:395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
பொருள் :செல்வர் முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
Call a spade a spade.
உள்ளதை உள்ளவாறு சொல்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
ஆயிரம் முறை தோற்றாலும்
லட்சியத்தை கைவிடாதீர்கள்.
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி கிடைக்கும்.
- சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?
2. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும்:
விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு". "விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்" எனும் பொன் மொழிகள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
ஜூன் - 14
ஜூன் 14 - உலக ரத்ததானம் அளிப்பவர் தினம்
நீதிக்கதை
வாழ்க்கை என்னும் வீடு...
பல வருடங்களாக தச்சர் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவருக்கு, தன் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எஜமானனிடம் தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க போவதாக கூறினார். இதைக் கேட்ட எஜமானனுக்கு அவரை விட மனமில்லை. இறுதியாக ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தச்சர், வீடு கட்ட களத்தில் இறங்கினார். ஆனால் அவருக்கு வேலையில் ஈடுபாடு இல்லை. ஏனோ தானோ என்று மனம் போன போக்கில் வீட்டைக் கட்டத் தொடங்கினார். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடித்தார் அந்த தச்சர். கட்டப்பட்ட வீட்டை பார்வையிடுவதற்காக எஜமானன் அங்கு வந்தார். வீட்டை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு சாவியை தச்சரிடம் நீட்டினார். நீங்கள் என்னுடன் வேலை செய்ததற்கான பரிசாக இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றுவிட்டார். ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் மறு பக்கம் துக்கமும் இருந்தது. தனக்கு தான் இந்த வீடு என்று தெரிந்திருந்தால் நான் இன்னும் அழகாக கட்டியிருப்பேனே என்று மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தான். தான் மோசமாக கட்டிய வீட்டில் தானே வாழ வேண்டியதாக இருக்கிறதே என்று நொந்து போனான். சில மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ என்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் கடினப்பட்டு வாழ்கிறார்கள். திறமையைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த வாழ்க்கையும் நமக்காகத்தான் அளிக்கப்பட்டு உள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் வாழ்ந்தாலும் அமைதியோடு, நிம்மதியோடு வாழ வேண்டும். அதுவே நம் வாழ்க்கைக்கு நாம் கட்டிக்கொள்ளும் வீடு ஆகும்.
நீதி : கடமையும் கண்ணியமும் கொண்டு பணிகளைத் திருந்தச் செய்தல் வேண்டும்
இன்றைய செய்திகள்
அருமை
ReplyDelete