உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் |
பால்: பொருட்பால்
அதிகாரம்: நட்பு
குறள் எண்:787
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
பொருள்:அழிவைத்தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
சிறு நுணலும் தன் வாயால் கெடும்.
know when to keep quiet .
இரண்டொழுக்க பண்புகள் :
1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.
2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.
பொன்மொழி :
உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும். ---சாக்ரடீஸ்
பொது அறிவு :
1.எல்லா வகை ரத்தத்தினுடனும் சேரும் ரத்த வகை குரூப் எது?
' ஓ 'பாசிஸிடிவ் - O positive
2. ஒரு துளி ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
30 கோடி.
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..
செப்டம்பர் 18
நீதிக்கதை
விவசாயி பதில்
ஒரு வயதான விவசாயி தனது நிலத்தில் பாடுபட்டு சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரிடம் இருந்த குதிரை காணாமல் போய்விட்டது.
உடனே அக்கம் பக்கம் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிஷ்டமான நிலை" என்று விவசாயிக்காக பரிதாபப்பட்டனர் விவசாயி "இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு பதில் கூறினார்.
அடுத்த நாள் காணாமல் போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்துக் கொண்டு விவசாய நிலத்துக்கு வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் "என்ன ஒரு அதிர்ஷ்டம்" என்று வியந்தனர். அதை கேட்ட விவசாயி அதுக்கும் "இருக்கலாம்" என்று பதில் அளித்தார்.
ஒரு வாரத்துக்கு பிறகு, விவசாயியின் மகன் குதிரையை ஓட்டி கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் "என்னப்பா இது! ஒரு நல்லது நடந்தால் ஒரு கெட்டது நடக்கிறது பாவம் உன்னுடைய பையனின் கால் உடைந்து விட்டதே" என்று வருந்தினார்கள். அதற்கும் அந்த விவசாயி பதிலாக "இருக்கலாம்" என்று மட்டுமே கூறினார்.
ஒரே வாரத்தில் நாட்டில் போர் சூழல் ஏற்பட்டது. எனவே,நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் போர்க்களம் வர உத்தரவிடப்பட்டது
ராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று அங்குள்ள இளைஞர்களை போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் விவசாயியின் மகனுக்கு கால் உடைந்து இருந்ததால் அவனை போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லவில்லை அதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் இதையும் புகழ்ந்து கூறினார்கள் அதற்கும் விவசாயி பதிலாக "இருக்கலாம்" என்று மட்டுமே கூறினார்.
ஊர் மக்கள் அவரின் பதிலை கேட்டு ஆச்சரியம் அடைந்தனர்.
நீதி: நல்லதும் கெட்டதும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. கஷ்டமான சூழ்நிலைகளில் இது நிரந்தரமல்ல நாளை என்று ஒருநாள் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...