சம இரவு நாள் |
பால் :பொருட்பால்
அதிகாரம் :நட்பு
குறள் எண்:790
இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்என்னும் நட்பு.
பொருள்: இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.
Blessed are the meek: for they shall inherit the earth.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.
2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.
பொன்மொழி :
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துபார் ,நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். ------ஹிட்லர்
பொது அறிவு :
1. மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பவை -
விடை : பன்றி.
2. HIV வைரஸின் வடிவம் -
விடை : கோள வடிவம்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
செப்டம்பர் 21
சம இரவு நாள்
நீதிக்கதை
நாணயம்
ஒரு நாள் கிராமத்தில் வசித்த ஏழை ஒருவர், தெருவில் நடந்து சென்ற பொழுது அவருக்கு மையத்தில் பெரிய துளையுடன் இருந்த பழங்கால நாணயம் ஒன்று கிடைத்தது.
அக்காலத்தில் துளையிட்ட காசு கிடைத்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. எனவே,அவரும் "எனக்கு இனி அதிர்ஷ்டம் தேடி வரும் நானும் பணக்காரனாகி விடுவேன்" என்று நினைத்தார். அதை தனது சட்டை பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.
அன்று அவருக்கு மற்ற நாட்களை விட அதிகமான வருமானம் கிடைத்தது. எல்லாம் அந்த நாணயம் கிடைத்த நேரம் என்று நினைத்தார்.
அன்றிலிருந்து அவர் தினமும் தன்னுடைய நாணயத்தை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொள்வார். வெளியில் எடுக்கவே மாட்டார். சில ஆண்டுகளில் அவருக்கு பதவியும் பணமும் அதிகமாகவே வந்து சேர்ந்தது.
அவர் தனது மனைவியிடம் "அந்த நாணயத்தை கண்ணால் பார்க்க வேண்டும் போல் உள்ளது" என்று கூறியபடி தனது சட்டைப் பையில் பத்திரப்படுத்தி இருந்த நாணயத்தை எடுத்துப் பார்த்தார்.
அந்த நாணயத்தின் மையத்தில் துளையே இல்லை. என்னவாயிற்று? என்று கேட்டார்.
அதற்கு அவரது மனைவி "சட்டை அழுக்காக இருந்ததால், அதை துவைக்க எண்ணி எடுத்து போது நாணயம் தவறுதலாக தெருவில் விழுந்து விட்டது.எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் நான் தான் வேறொரு நாணயத்தை சட்டை பைக்குக்குள் போட்டு வைத்தேன் என்றார்.
"இது எப்போது நடந்தது?" என்று அவர் கேட்டார். அதற்கு அவரது மனைவி தங்களுக்கு நாணயம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் நடந்தது என்றார்.
அதன் பின் அவர் யோசித்தார். அப்படியானால் நமக்கு அதிர்ஷ்டம் கொடுத்தது அந்த நாணயம் அல்ல. நமது நம்பிக்கையும், உழைப்பும் தான் என்று எண்ணி மகிழ்ந்தார்.
நீதி: நமது உழைப்பு, தன்னம்பிக்கை மட்டுமே நமக்கு வெற்றியைத் தேடித் தரும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...