Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2025

 

 

நெதர்லாந்து


  






திருக்குறள்: 

பால்:பொருட்பால்             

அதிகாரம்: மானம்

குறள் எண்:964

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.

பொருள்:
நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப் போல் இகழப்படுவர்.

பழமொழி :

தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும். 

  Having ascertained your own ability , display it in the assembly.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.

வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்

------விவேகானந்தர்

பொது அறிவு : 

1. சைக்கிளில் அலுவலகம் செல்வதற்கு எந்த நாட்டில் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?

 விடை : நெதர்லாந்து.  

2. வாழை மரத்தின் ஆயுட்காலம் என்ன?

 விடை :25 ஆண்டுகள்

English words & meanings :

 Path.   -    பாதை
 
Pond.     -    குளம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 இன்று உலக மக்கள் தொகையில் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 06

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நாள் (FGM), ஆண்டுதோறும் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


நீதிக்கதை

 நன்றி மறவாத புலி 


நெடு நாட்களுக்கு முன்பு அந்த காட்டில் இந்தப் புலி வசித்து வந்தது. ஒரு நாள் அது உறுமிக் கொண்டே நடந்து சென்றது. உறுமிக் கொண்டே செல்லும்போது, அது முள்ளின் மீது கால் வைத்தது, முள் குத்தியதில் வலியால் மிகவும் துடித்தது.


அது தானாகவே அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் புலியால் அந்த முள்ளை எடுக்க முடியவில்லை. அது வலி தாங்க முடியாமல் மிகவும் கத்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த மனிதன் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தான். அவன் காதில் இந்த சத்தம் விழுந்தது.


“என்ன சத்தம் இது? ஏதோ ஒரு மிருகம் வலியால் துடித்துக் கொண்டிருப்பது போலிருக்கிறதே” என்று அந்த சத்தத்தை  கவனித்துக்கொண்டே புலி இருக்கும் இடத்திற்கு வந்தான்.


அந்தப் புலியை பார்த்து “அடக்கடவுளே! இது ஒரு புலி ஆச்சே..” என்று பயந்தான் இருந்தும் பாவம் பார்த்து அந்த புலிக்கு உதவ மனிதன் முன்வந்தான். மெதுவாக நடந்து அதன் அருகே சென்று அந்த முள்ளை புலியின் காலிலிருந்து எடுத்து விட்டான். புலி நன்றியோடு அந்த மனிதன் முகத்தில் நக்கிக் கொடுத்தது. அந்த மனிதனுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் அதன் வழியே சென்றது.


சில நாட்களுக்குப் பிறகு, கொள்ளைக்காரர்கள் அந்த காட்டுக்குள் வந்து விலங்குகளை 

தூரத்தினர். அப்போது காட்டில் உள்ள வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்தன. அதில் புலி ஒன்றும் இருந்தது.


 மனிதன் ஒருவனைக் கண்ட புலி அந்த மனிதன் மீது பாயத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று நின்றுவிட்டது. அன்றைக்கு புலிக்கு உதவி செய்த அதே மனிதன் தான் அவர். வலிமையான அந்த புலி அந்த மனிதன் அருகே சென்று அவன் முகத்தில் நக்கிக் கொடுத்தது, அவரும் அந்த புலியை அன்புடன் அரவணைத்தார்.


இதைப் பார்த்துக் கொண்டிருந்த  கொள்ளைக்காரர்கள் அவர்கள் தவறை உணர்ந்தார்கள். அன்று முதல் புலியும் அந்த மனிதனும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.


நீதி : எந்த நல்ல செயல் செய்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

06.02.2025

* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

* பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுக்கப்பட்டன.

* சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றி வந்த அமெரிக்க விமானம் இந்தியா வந்தடைந்தது.

* காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு.

* 38-வது தேசிய விளையாட்டு போட்டி:  பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன்  தங்கப்பதக்கம் வென்றார்.

* ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கோங்கடி திரிஷா பெற்றுள்ளார்.

Today's Headlines

* Pensions with increased dearness allowance have been credited to the bank accounts of transport pensioners.

* A small piece of broken gold and a bone-pointed tool were found in the ongoing excavations at the Golden Fort.

* A US flight carrying 104 Indians who had illegally immigrated to the US has arrived in India.

* China, Saudi Arabia and Turkey strongly oppose Trump's announcement to 'capture' Gaza.

* 38th National Games: Tamil Nadu's Satish Karunakaran wins gold medal in badminton men's singles.

* India's opening player, Gongadi Trisha, has won the player of the season award in the Junior Women's T20 World Cup.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive