Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2025

 

 

சார்லஸ் டார்வின்


  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்:மானம்

குறள் எண்:967

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
 கெட்டான் எனப்படுதல் நன்று.

பொருள்:
பகைவர் பின் சென்று வாழ்வதை விட மானத்துடன் தன்னிலையிலிருந்து இறப்பது மேல்.

பழமொழி :

No honest man ever repented of his honesty .

 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :   

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு  தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌ 

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.

பொன்மொழி:

போலியான நண்பனாக இருப்பதைவிட

வெளிப்படையான எதிரியாக இரு

------ தந்தை பெரியார்.

பொது அறிவு : 

 1. திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒரே விதை_________ 

விடை :  குன்றிமணி.    

 2. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?

 விடை : ராகேஷ் ஷர்மா

English words & meanings :

Road -    சாலை

Rock.    -    பாறை

வேளாண்மையும் வாழ்வும் : 

 நீர்வளங்களை திறம்பட நிர்வகிப்பது ஒரு நிலைத்த தன்மை மற்றும் நீருக்கான பாதுகாப்பு இலக்குகளை அடையவும், நீர் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.

பிப்ரவரி 12

டார்வின் நாள் - darwin day

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூaருகிறார்கள்.

நீதிக்கதை

 கொக்கும்‌ மீனும்‌ 


ஒரு மடைவாயில்‌ கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த மடையில்‌ வந்து கொண்‌டிருந்த ஒரு கொழுத்த மீன்‌  கொக்கைப்‌ பார்த்தவுடன்‌ பயந்து நின்று விட்டது. 

 மீனின்‌ தாய்‌, அதனிடம்‌ கூறிய சொற்கள்‌ அதற்கு நினைவுக்கு வந்தன. “கொக்குகள்‌ நிற்கும்‌ இடத்தைக்‌ கண்டால்‌ அங்கே போகாதே, அவை மீன்களைப்‌ பிடித்துத்‌ தின்றுவிடும்‌?” என்று அது கூறியிருந்தது. எனவேதான்‌ அந்தக்‌ கொழுத்த மீன்‌ கொக்கைக்‌ கண்டவுடன்‌ பயந்து நின்று விட்டது. 

ஆனால்‌, அதைக்காட்டிலும்‌ சிறிய மீன்களெல்‌லாம்‌ சிறிதும்‌ அச்சமில்லாமல்‌ மடைவாய்‌ வழியாகச்‌ சென்று கொண்டிருந்தன. கொக்கு நிற்பதைப்‌ பற்றி அவை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஒன்றன்‌ பின்‌ ஒன்றாக மீன்கள்‌ தன்னைக்‌ கடந்து செல்வதை அந்த கொழுத்த மீன்‌ பார்த்துக்கொண்டிருந்தது.  

மீன்‌ சிறிது நேரம் நின்று கவனித்தது.பின்பு, "இந்தக்‌ கொக்கு ஏமாளிக்‌ கொக்கு போலிருக்கிறது" இத்தனை 

மீன்களை தின்னவில்லை.   சின்ன சின்ன மீனெல்லாம்‌ அந்தக்‌ கொக்குக்குப்‌ பயப்படாமல்‌ போகும்‌ போது நான்‌ ஏன்‌ பயப்படவேண்டும்‌” என்று நினைத்துக்‌ கொண்டு அதுவும்‌ புறப்பட்டது. 

மடைவாயை அந்தக்‌ கொழுத்த மீன் நெருங்கியது. . அதே சமயம்‌ கொக்கு அதைப்‌ பிடித்தது. அந்தக்‌ கொக்கு, 

மறுபடியும்‌ கொழுத்த மீன்‌ எப்போது வரும்‌ என்று எதிர்பார்த்துக்‌ கொண்டு மடைவாயின்‌ கரையில்‌ நின்று கொண்டிருந்தது. 

கருத்துரை :-- ஓடுகிற மீனையெல்லாம்‌ ஓட விட்டு விட்டுப்‌ பொருத்தமான மீன்‌ வரும்போது சட்டென்று கொத்தித்‌ தின்னும் கொக்கு.அடக்கமாக உள்ளவர்கள்‌  கொக்குப்‌போல்‌  தகுந்த காலத்தை எதிர்பார்த்துக்‌ காத்திருப்பவர்களே.அவர்களை ஏமாளிகள்‌ என்று எண்ணிவிடக்‌ கூடாது.

இன்றைய செய்திகள்

12.02.2025

* ‘பிங்க்’ ஆட்டோ திட்​டத்​தில் திறன் மேம்​பாட்டு கழகம் மூலம் சென்னை​யில் 250 பெண் ஓட்டுநர்​களுக்கு பயிற்சி.

* பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழகம் முதன்மை மாநிலம்: மத்திய அரசு தகவல்.

* பெங்களூருவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி தொடக்கம்.

* மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

* ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.

* ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார்  வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோமல் வாரிக்கன்.

Today's Headlines

* 250 women drivers trained in ‘Pink’ auto industry through Skill Development Corporation in Chennai.

* Tamil Nadu leads state in preventing infant deaths: Central government information.

* Aero India Air Show begins in Bengaluru with participation of over 80 countries.

* US President Donald Trump has ordered the renaming of the Gulf of Mexico as the Gulf of America.

* The Asian Mixed Team Badminton Championship began yesterday.

* West Indies player Jomal Warrick won the ICC Player of the Month award for January.
Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive