தமிழக
சட்டசபை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட உள்ளது. அப்போது தமிழக
அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படும். இதன்
முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்பட அனைத்து
அமைச்சர்களும் பங்கேற்றனர். காலை 10.55 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை
கூட்டம், நண்பகல் 12.05 மணிக்கு முடிந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்
பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வேலூர், தூத்துக்குடி, திருச்சி, தொழிற்சாலைகள் அமைக்கும் முதலீட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய திறன் மற்றும் லெதர் அல்லாத காலணி, உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...