மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் கல்வித்துறைக்கு ரூ.50,067 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.78,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்காக புதிய சீர்மிகு மையம் ரூ.500 கோடியில் அமைக்கப்படவுள்ளது. ஐஐடிக்களில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப்பின் 5 ஐஐடிக்களில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதால், கூடுதலாக 6,500 மாணவர்கள் படிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. ஐஐடி பாட்னாவில் தங்கும் விடுதி வசதி உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 65,000-லிருந்து ரூ.1.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐஐடிக்களுக்கு மட்டும் ரூ.11,349 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் பிராண்ட் பேண்ட் இணைப்பு வழங்கப்படவுள்ளது. அரசு பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 அடல் டிங்கரிங் கூடங்கள் உருவாக்கப்படும். திறன்மேம்பாட்டுக்கு 5 தேசிய திறன் மையங்கள் அமைக்கப்படும். பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் இந்திய மொழி புத்தகங்களை வழங்க பாரதிய பாஷா புஷ்தக் திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
Padasalai Today News
» 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்கள்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்கள்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
2025-26-ம்
ஆண்டுக்கான பட்ஜெட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ
இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த
ஆண்டில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 10,000 இடங்கள்
கூடுதலாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...