Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வூதிய நாடகங்கள் தொடர்கதையே!!! - செல்வ.ரஞ்சித் குமார்

 .com/


10 இலட்சம் அரசு ஊழியர் - ஆசிரியர் - பொதுத்துறைப் பணியாளர் குடும்பங்களின் வாழ்வாதார நம்பிக்கையைப் பாடையில் ஏற்றி, Pension நாடகமாடும் திமுக!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


2003-ல் தாம் பறித்த பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான  வல்லுந‌ர் குழுவை, தொடர் காத்திருப்புப் போராட்டங்களின் காரணமாக 22.02.2016-ல் அமைத்தது அப்போதைய அஇஅதிமுக அரசு. பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் 7 முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இறுதியாக 27.11.2018-ல் வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. 2021 ஏப்ரல் வரை ஆட்சியிலிருந்த அஇஅதிமுக இதில் அடுத்த கட்டமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழுவின் அறிக்கையையும் வெளியிடவில்லை.


ஆட்சிக்கு வந்தவுடன் பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று போராட்டக் களந்தோறும் வந்து வாக்களித்ததோடே, 309-வது தேர்தல் வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த திமுகவின் விடியலரசு 2021-22 பட்ஜெட்டின்  ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கைக் கொள்கை விளக்கத்தில் வரிசை எண் 11-ல் வல்லுநர் குழு எனும் தலைப்பில் தனது அதிகாரப்பூர்வ முதல் பதிலை அளித்தது.


அதனைத் தொடர்ந்து கடந்த 2024-25ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஓய்வூதிய மானியக் கோரிக்கை கொள்கை விளக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விடியலரசு பல்வேறு அதிரடி அச்சு மாற்றங்களைச் செய்து வந்தது. அதன் விபரம் பின்வருமாறு. . . .


2021-22  பத்தி எண்.11:


தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016 ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.


2022-23 பத்தி எண்.12:


தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான *முடிவினை* மேற்கொள்ள *அரசிற்* பரிந்துரைக்க ஏதுவாக *2016-ஆம்* ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.


2023-24 பத்தி எண்.9:


வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையானது 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


2024-25 பத்தி எண்.8:


வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.


ஒட்டுமொத்தமாகக் கடந்த 4 நிதிநிலை அறிக்கையில் விடியலரசானது தனது கொள்கை விளக்கக் குறிப்பேட்டினில்,


அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .


அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. . . .


அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. . . .


அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .


என்று மாற்றி மாற்றி அச்சடித்துக் கூறிவந்ததே அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட த.நா பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் ஏமாற்றிக் காலத்தைக் கடத்தத்தான்  என்பது, 04.02.2025ல் வெளியான தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு எண் 271ன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.


ஆம். 2016ல் அமைத்து 2018ல் இறுதியான பழைய ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்து வருவதாக 2021 முதல் 2025 வரை 4 ஆண்டுகளாகக் கூறி வருடாவருடம் சட்டசபையில் மாற்றி மாற்றி வாசித்துக் காட்டிய கொள்கைவிளக்கக் குறிப்பிற்கே முரணாகவும், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு நேர்மாறாகவும்  OPS - CPS - UPS பற்றி ஆராய புதிதாக 3 நபர் அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


PFRDAவில் ஒப்பந்தமிட்டு (பாதிப்புகளிருப்பினும்) பணிக்கொடையுடன் கூடிய NPSஐக்கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில், NPSன் அகோர வடிவமாக பாஜக கொண்டு வந்துள்ள UPSஐயும் சேர்த்து ஆராயப்போவதாக அறிவித்துள்ளது என்பது கொடுமையிலும் கொடுமையாக - துரோகத்தின் உச்சமாக அரசு ஊழியர்கள் கருதுகின்றனர்.


முன்னதாக, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைக்காக - தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்ட ஊதியக் கோரிக்கைக்காக 1.1.2023ல் குழு அமைத்து 2 ஆண்டுகள் கடந்தும், கோரிக்கைக்கே தொடர்பில்லாத பட்டதாரி ஆசிரியர்களின் சங்கங்களையெல்லாம் அழைத்தும், புதிது புதிதாக சங்கங்களை உருவாக்கியும் அவர்களிடமும் கருத்துக் கேட்கிறோம் என்ற பெயரில் நீண்ட நெடிய நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.


இத்தகைய சூழலில்தான் ஆட்சியின் முழுமையான இறுதி நிதிநிலையறிக்கை சமர்ப்பித்து வரும் இந்நாள்களில்கூட தனது வாக்குறுதியை நிறைவேற்ற மனதின்றி மேலும் மேலும் காலங்கடத்தும் நோக்கோடே (இடைக்கால நிதிநிலையறிக்கைகக்கும் 12 மாதங்களே உள்ள நிலையில்) 9 மாத கால அவகாசமளித்து இந்த OPS-CPS-UPSஐ ஆராயும் அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது. அதுவும் மாநில அரசின் நிதி நிலையினையும் கருத்தில் கொண்டு ஆராய அக்குழு பணிக்கப்பட்டுள்ளது.


இக்குழுவின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதற்கு இடைநிலை ஆசிரியர் ஊதியக் குழுவும், 9 மாதங்களுக்குள் குழு அறிக்கையைச் சமர்ப்பித்தாலும் அதன் முடிவை அறிவிப்பார்களா என்பதற்கும் கண்முன்னே வரலாறுகள் உள்ளன.


ஒருவேளை தங்களது வரலாறுகளைப் பொய்ப்பித்து நல்ல தீர்வு கிடைக்க வழிவகை இருக்கிறதா என்றால், தாங்கள் போராட்ட மேடைதோறும் தேடிவந்து வாக்களித்த - தமது தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்ட வாக்குறுதிகளுக்கு நேர் மாறாக. . . .


* Incentive முன் தேதியிட்டு இரத்து,

* EL Surrender இரத்து,

* SG Teacher Pay அழிப்பு

* SG Teacher - BT Promotion இரத்து,

* HM Promotion இரத்து,

* TRB/TET Posting இழுவை,

* Outsourcing நியமனம்,

* அரசுப்பணிகள் தனியார்மயம்

* பணி நிரந்தரம் மறுப்பு etc.,


என்று விடியலரசின் அடுக்கடுக்கான விண்ணைமுட்டும் செய்கைகளால் விழி வியர்த்துப் போயுள்ள யாவருக்கும், நிதி நிலையினையும் கருத்தில் கொண்டு ஆராய வேண்டுமென பணிக்கப்பட்டுள்ள இக்குழுவின் முடிவு என்னவாக இருக்குமென்பதும் கண்முன் காட்சியாக நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது.


'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என திமுக தலைவர் பதவியேற்கும் போது, ஏதோ தானே முதலமைச்சர் ஆகிவிட்ட உணர்விலிருந்தோருக்கும் -  அவர்களின் குடும்பங்களுக்கும் விடியலரசு இக்குழுவின் மூலம் உறுதிபட உணர்த்தியுள்ளது. . . . 'நஞ்சை உண்டுவிட்டீர்கள்; நாண்டு கொண்டு தொங்கத் தூக்குக்கயிற்றைத் தேடித்தருகிறேன் காத்திருங்கள்!' என்பதேயன்றி வேறென்னவாக இருக்கக்கூடுமென்பதே அரசு ஊழியர்களின் உள்ளக்குமுறலாக உள்ளது.


நம்பி வாக்களித்தோர் இப்படியென்றால் நம்பிக்கை காட்டி கூட்டி வந்த சங்கத் தலைமைகளில் சிலரோ இவ்வளவு நடந்தும் ஆட்சியாளர்கள் மீதான தமது 100% நம்பிக்கையில் துளியளவும் குறையவில்லையென கூட்டங்கூடி அறிவித்து வருகின்றனர். இவர்களது நம்பிக்கை அறைகூவல், 'எப்படியும் தூக்குக் கயிற்றைத் தேடித்தந்துவிடுவார் காத்திருங்கள்' என்பதாக உள்ளதே அன்றி உண்ட நஞ்சிற்கான முறிவு மருந்தாக இல்லவேயில்லை என்பதே கள எதார்த்தமாக உள்ளது.


நச்சு முறிவு மருந்து ஒன்றே!


அஃது


ஒன்றுபட்ட  உறுதியான போராட்டமே!!


அதுவரை,

ஓய்வூதிய நாடகங்கள் தொடர்கதையே!!!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive