எருக்கஞ்சேரி_நீலகண்டபிரம்மச்சாரி
செயல்கள் தேவை; சொற்களல்ல.
Wanted deeds only, not words.
இரண்டொழுக்க பண்புகள் :
* பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.
*பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .
பொன்மொழி :
எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல, எவரும் எவருக்கும் மேலானவனும் அல்ல, மனிதர்கள் அனைவரும் சமம்.---தந்தை பெரியார்
பொது அறிவு :
1. உலகின் முதல் கணினி வைரஸை உருவாக்கிய நாடு எது?
விடை: பாகிஸ்தான்.
2. இந்தியாவின் இளைய பிரதமர் யார்?
விடை: ராஜீவ் காந்தி
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
விவசாய உற்பத்தியில் அதிகப்படியான நீர், கனமழை முதல் அதிகப்படியான நீர்ப்பாசனம் வரை, பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கும், அத்துடன் கட்டிடங்கள்/கட்டமைப்புகளை சேதப்படுத்தும்.
மார்ச் 06
#எருக்கஞ்சேரி_நீலகண்டபிரம்மச்சாரி.
நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்ற வழியாக 7.1/2 வருடம் தண்டனை பெற்ற போது தான் இவர் பெயர் பிரபலமானது. விடுதலை இயக்க போராட்டத்தில் இளம் வயதில், தமிழகத்தில் 20,000 போராளிகளை ஒன்று திரட்டி பாரத மாதா சங்கம் என்ற புரட்சி இயக்த்தை தோற்றுவித்து போராடியவர். வாழ்வின் பெரும் பகுதியை இந்தியா, பாகிஸ்தான். மியான்மர் நாட்டு சிறைகளில் கழித்தவர். சிறையில் இருக்கும் போது அவருக்கு வயது 21 தான், சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறார்.
நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம், அதற்கு கிடைத்ததோ பசியும், பட்டினியும். பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு
#இராப்பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார்.
பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டது என்று நினைத்த அவர் அதையும் நிறுத்தி விட்டார், விளைவு பல நாள் பட்டினி.
ஒரு நாள் பசி பொறுக்கமுடியாமல் திருவல்லிக்கேணியில் தங்கி இருந்த தனது நண்பர் பாரதியாரை பார்க்க வருகிறார், பசியால் வாடிப் போன நீல கண்டனை பாரதியாருக்கு அடையாளம் தெரியவில்லை,
#பாரதி நான் தான் உன்_நீலகண்டன்,
என்று சொன்னவுடன்,
டேய் நீலகண்டா என்னடா இது கோலம் என்று அவரை கட்டி அணைத்துக் கொண்டார்.
பாரதி எனக்கு ரொம்ப பசிக்கிறது, ஒரு நாலணா ( 25பைசா) கொடேன், சாப்பிட்டு நான்கு நாளாச்சு என்றார். இதை கேட்டவுடன் கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார், அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சிகரமான பாடல் தான்
#தனியொருமனிதனுக்குஉணவில்லை_எனில்
#ஜகத்தினைஅழித்திடுவோம், அப்பேற்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த்தினம் இன்று, மீண்டும் மீண்டும் நினைவு கூறுவோம்.
---------------------------------
வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்
![]() |
| வலந்தீனா தெரெசுக்கோவா |
நீதிக்கதை
நாளைய உணவு
சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது.
அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது.
அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்றது காட்டமாய்.இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.
சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன.
வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.
‘அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன.
‘இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.
இன்றைய செய்திகள்









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...