
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டுக்கு (2024-2025) மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ((PM YASASVI Postmatric Scholarship For OBC's, EBC's & DNT's Students) பெறுவதற்காக
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் ஆன்லைன் விண்ணப்பங்கள் (https://umis.tn.gov.in) கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை வரவேற்கப்பட்டன.
தற்போது மாணவர்களின் நலன் கருதியும், கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள எந்த மாணவரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டும் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுகிறது. காலஅவகாச நீட்டிப்பு விவரத்தை மாணவர்களிடம் தெரிவிக்குமாறு அனைத்து கல்வி நிலையங்களின் முதல்வர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோல், மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது தற்போது தான் பள்ளிக்கல்வித்துறையின் 14417 உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உறுதி செய்தோம்.
ReplyDeleteUMIS என்பது பள்ளிக்கல்வி முடித்த கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் பயனர் பெயர்( login User name) ஆகும்
ReplyDelete