இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த ஆண்டு மட்டுமே ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.5 லட்சத்தை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன. அதன்மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் உட்பட பணிகளை அரசுப் பள்ளிகளில் செய்துள்ளோம்.
நம்மை வளர்த்த சமூகத்துக்கும், பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் மற்றும் 1,500 நன்கொடையாளர்களுக்கும் நன்றிகள். இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பாராட்டுகள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...