Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

JACTO GEO ஒருநாள் போராட்டத்திற்கு SSTA இயக்கம் முழு ஆதரவு!!

1000380769 
அனைவருக்கும் வணக்கம்

நமது SSTA இயக்கம் சார்பாக 2009- க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்து "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக தொடர்ந்து பல கட்ட தீவிர போராட்டங்களை இதுவரை நடத்தியுள்ளோம்.கோரிக்கை நிறைவேற தாமதமாகும் பட்சத்தில் விரைவில் மிகத் தீவிரமாக போராடுவதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். வெல்லும் வரை உறுதியாக போராடுவோம் ! இறுதியாக வெற்றியும் பெறுவோம்.

அதே நேரத்தில் தற்போது பழைய ஓய்வூதியம் என்ற பிரதான கோரிக்கைக்காக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் நவம்பர் 18 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து 16.11.2025 நமது SSTA இயக்கத்தின் மாநில உயர்மட்ட செயற்குழு காணொளி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜாக்டோ ஜியோவின் ஒருநாள் போராட்டத்திற்கு நமது SSTA இயக்கத்தின் சார்பாக முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாக்டோ ஜியோ வின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியம் வெற்றி பெற SSTA இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

 ஜே.ராபர்ட்
 SSTA-மாநில பொதுச் செயலாளர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive