Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

  

ஒவ்வொரு ஒன்றியத்திலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் போது கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 


⚓விசாரணையில் அரசு தரப்பில் கலந்தாய்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை தடை செய்ய முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


⚓வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஜி.சங்கரன் மாநிலங்கள் முழுவதும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது, அதனால் கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்ய கூடாது என வாதிட்டார்.


⚓அதன் அடிப்படையில் 'கலந்தாய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


⚓செப்டம்பர் மாதம் மீண்டும் 01.08.2026 மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும்.

⚓தற்போது நடைபெறும் சிறப்புத் தகுதி தேர்வு முடிந்த பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.


 ⚓அதன் பின்னர் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கி தற்போது நடைபெற்று வருகின்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.


தற்போது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான இணையவழி கூட்டம் நடைபெற்று வருகிறது. எனவே கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive