![]() |
| கல்பனா சாவ்லா |
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:440
குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
பொருள்:
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் .
A little string will tie a little bird
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
இரண்டொழுக்க பண்புகள் :.
1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் .
2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
வெற்றி பெறுவதற்கு முன் தோல்வியை சந்திக்கத் தயார் ஆகுங்கள்.
Thought for the Day :
If you want to shine like the sun, first burn like the sun.
பொது அறிவு :
1. தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
கடலூர்.
2. தமிழ்நாடு எத்தனை கி.மீ கடற்கரை பகுதியைக் கொண்டிருக்கிறது?
1076 கி.மீ.
English words :
Implement – Execute, செயல்படுத்து.
Negotiate – Discuss to reach agreement, பேச்சுவார்த்தை நடத்து.
புவியியலும் சுற்றுசூழலும் :
நாடுகள் (Countries)
ஒரு நாடு என்பது தனித்த அரசாங்கம் கொண்ட அரசியல் பிரதேசம்.
உலகில் தற்போது சுமார் 195 நாடுகள் உள்ளன (193 ஐ.நா. உறுப்பினர் நாடுகள் + 2 பார்வையாளர் நாடுகள்).
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்த கொடி, தலைநகர், மொழி மற்றும் கலாச்சாரம் உள்ளது.
NMMS :
SAT - SOCIAL SCIENCE
பாண்டிய அரசர்களின் படைத்தளபதிகளின் பட்டங்கள்
(1) மாறன் - எயினன்
(2) மாறன் - ஆதித்தன்
(3) சாத்தன் - கணபதி
(4) மூர்த்தி - எயினன்
விடை: மாறன் - ஆதித்தன்
ஜூலை 01
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடுகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.
கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள்
- விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.
சாதனைகள்:
- நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.
- இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.
- அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விண்வெளிப் பயணம்:
- விமானம் மற்றும் கிளைடர்களை 1988-ல் மற்றவர்களுக்கு பயணிக்க கற்று கொடுப்பதற்கான சான்றிதழ் மற்றும் அவர் பயணிப்பதற்கான உரிமத்தை பெற்றார் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் 1995-ல் நாசா சென்றார்.
- கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் செய்தார்.
- இவரின் இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003-ம் ஆண்டு நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் ஏழு பேர் பயணித்தனர். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை முடிப்பதற்கு பதினாறு நாட்கள் ஆனது.
- விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
நீதிக்கதை
ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை.
சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.
அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.
சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.
நீதி :
அடுத்தவரை ஏமாற்ற நினைத்தால் நாம்தான் ஏமாறுவோம்.
இன்றைய செய்திகள்







.jpg)

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...