Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புத்தகப் பை சுமை குறைப்பு மற்றும் பல... - கல்வித் திட்ட மாற்றம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விவரிப்பு

hindutamil-prod%2F2026-07-21%2Fbvntw47a%2FBeFunky-collage-2026-07-21T141745.486

 “புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும். அப்போது மாணவர்களின் மனச்சுமையும் குறையும். கதைகளின் வடிவில் மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரப்படும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது; கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாக மாறப்போகிறது. அனைவருக்குமான, ஆரோக்கியமான கல்வியாக இருக்கப் போகிறது. அதோடு, பெற்றோரை மதிக்கும் கல்வித்திட்டமாக இருக்கும்.

கதைகளின் வடிவில் மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரப்படும். புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும். அப்போது மாணவர்களின் மனச்சுமையும் குறையும். பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும்.

எழுத்துக்கள் குறைந்து, வண்ணப்படங்கள் அதிகமாக்கப்படும். அந்த வண்ணப்படங்கள் , குழந்தைகளுடன் பேசும். அதில் ஒரு கியூஆர் கோடு இருக்கும்; அதை ஸ்கேன் செய்து பார்த்தால், அது காணொளியாக மாறும். ஏஐ தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும்.

ஏஐ பற்றி யாரும் அச்சப்பட வேண்டாம். அது ஒருபோதும் நமது வேலையைப் பறிக்காது. தகுதி, திறமையை வைத்துமட்டும் தான் ஆசிரியர்கள் உள்ளே வர முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்கப் போகிறோம். கல்வித்துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive